கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஜாக்கிரதை!!
சென்னை:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சில் ஒரு பெண் பயணியிடம் ரூ. 1 லடசம் மதிப்புள்ள நகை, பணம்,செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.
ஆவடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மனைவி கண்ணகி (30). இவர் திருச்சிசெல்வதற்காக தனது மகன், மாமனாருடன் கோயம்பேடி பஸ் நிலையம் வந்தார்.திருச்சி பஸ்சில் அவர்கள் ஏறினர். அப்போது 20 பவுன் நகை, ரூ. 10,000, செல்போன் போன்றவற்றை ஒருபையில் போட்டு அதை பஸ்சில் பைகள் வைக்கும் இடத்தில் மேலே வைத்தார் கண்ணகி.
அப்போது பஸ்சில் ஏறிய 2 இளைஞர்களில் ஒருவன் தனது பையை கண்ணகியின் பை அருகே வைத்துவிட்டுபின் சீட்டில் அமர்வது போல அமர்ந்தான். அவனருகே இன்னொரு இளைஞனும் அமர்ந்தான்.
சீட்டில் ஜன்னல் பக்கமாக யார் அமர்வது என்று சண்டை போடுவது போல இருவரும் பாவ்லா காட்டினர்.இதையடுத்து இரு இளைஞர்களும் பஸ்ஸை விட்டு இறங்கினர்.
அவர்கள் இறங்கிய பின்னர் பார்த்தபோது, கண்ணகியின் பையைக் காணவில்லை. தனது பையை கண்ணகியின்பை அருகே வைத்த வாலிபன், இரண்டு பைகளையும் எடுத்துக் கொண்டு இறங்கியுள்ளான்.
அவர்கள் சண்டை போட்டது கூட பயணிகளை குழப்புவதற்காகத் தான் என்பது பின்னர் தெரியவந்தது.
நகை, பணம், செல்போனை பறிகொடுத்த கண்ணகி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications