ஜெவின் பிரச்சார பயண திட்டம்: செங்க்ஸ் பிஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை

ஜெயலலிதாவின் பிரச்சார பயணத் திட்டத்தை உருவாக்கும் பணியில் அதிமுக அமைப்புச் செயலாளர்செங்கோட்டையில் படு பிசியாக உள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவது குறித்து அதிமுக தேர்தல் குழுவினரும் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்த தொகுதிப் பட்டியல் ஓரிரு நாட்களில்அறிவிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

இதையடுத்து இம்மாத இறுதியில் அதிமுக வேட்பாளர் பட்டியலை நல்ல நாள் பார்த்து முதல்வர் ஜெயலலிதாவெளியிடவுள்ளார்.

அதன் பின்னர் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ஜெயலலிதாவின் பிரச்சார சுற்றுப் பயணம் தொடங்கவுள்ளது.இந்த பிரச்சாரத் திட்டத்தை அதிமுகவின் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் தீட்டி வருகிறார்.

ஜெயலலிதா செல்லும் பாதைகள், கூட்டங்கள் நடக்கப் போகும் இடங்கள் என தமிழக மேப்பும் கையுமாகபரபரப்பாக இருக்கிறார் செங்கோட்டையனும் அவரது டீமும்.

அந்தப் பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்டவை குறித்தும் பொதுப் பணித்துறை மற்றும் அப் பகுதி கட்சிநிர்வாகிகளுடன் பேசி ஜெயலலிதாவுக்கான பயணத் திட்டத்தை வகுத்து வருகிறார். (மாஜி போக்குவரத்துஅமைச்சரான செங்ஸ்சுக்கு தேர்தல் வரும்போது மட்டும் கட்சியில் அதீத முக்கியத்துவம் கிடைக்கும்.அதன்பின்னர் காணாமல் போவார். இந் நிலையில் இப்போது செங்ஸ் படு பிஸி.)

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவுள்ள ஜெயலலிதா, குறிப்பாக கிராமங்களுக்குள்புகுந்து வரவுள்ளார். அதற்கேற்ப திட்டம் வகுக்கப்படுகிறது.

மேலும் அரசு செலவில் புதிதாக ஜெயலலிதாவுக்காக ஒரு ஹெலிகாப்டரும் வாங்கப்பட்டுவிட்டது. இதுவும்தேர்தல் பிரச்சாரத்துக்கு பெருமளவில் பயன்படுத்தப்படவுள்ளது.

இதனால் ஜெயலலிதாவின் சுற்றுப் பயண திட்டத்தில் வரும் நகர்களுக்கு அருகே ஹெலிபேட்களும்அமைக்கப்படவுள்ளன. தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய வரும்போது மதுரை அல்லது திருச்சியில்ஜெயலலிதா தங்குவார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+