திமுகவில் சீட் கேட்கும் ஜெகஜால ஜெயலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென் மாவட்ட காவல்துறையை தனது சேலை முந்தானையில் முடிந்து தமிழகத்தையேகலக்கிய சிவகாசி ஜெயலட்சுமி, திமுக சார்பில் வரும் சட்டசபைத் தேர்தலில்போட்டியிட சீட் கேட்டு கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Jayalakshmiஏட்டில் ஆரம்பித்து எஸ்.பிக்கள் வரை தனது காமக் கண்ணில் சிக்க வைத்துகாவல்துறையை கலகலகக்க வைத்தவர் ஜெயலட்சுமி. அத்தோடு நில்லாமல் பணமோசடி, நகை மோசடி என ஏகப்பட்ட சிக்கலிலும் சிக்கினார்.

திண்டுக்கல் டி.எஸ்.பியாக இருந்த ராஜசேகரை 2வது திருமணம் செய்து கொண்டஜெயலட்சுமி, அவரது மனைவி விசாலாட்சியின் தற்கொலைக்குக் காரணமாகஇருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று சிறைவாசம்அனுபவித்து வருகிறார்.

ஜெயலட்சுமியின் ஆசியால் பல காக்கிகள் சஸ்பெண்ட் ஆகி மொட்டுவளையைபார்த்தபடி வீட்டில் அமர்ந்துள்ளனர்.

சமீபத்தில் மதுரை நீதிமன்றத்திற்கு ஒரு வழக்குக்காக கொண்டு வரப்பட்டஜெயலட்சுமி, தான் அரசியலில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கருணாநிதிக்கு கடிதம்எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், மாண்புமிகு முன்னாள் முதல்வர், திமுக தலைவர் டாக்டர் கலைஞர்அவர்களுக்கும், திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் சிவகாசிஜெயலட்சமி வணக்கத்துடன் எழுதிக் கொள்வது:

இந்த அரசின் காவல்துறை அதிகாரிகளாலும், சில அரசியல்வாதிகளாலும் நான்மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டேன். நான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதுஅனைவருக்கும் தெரியும்.

காவல்துறையினரால் என்னைப் போன்று எத்தனையோ அபலைப் பெண்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிட வேண்டும் என்பதற்காக தேர்தல்களத்தில் குதிக்க விரும்புகிறேன்.

பாதிக்கப்பட்ட பெண்களுககாக போராட, வாதாட வருகிற சட்டசபைத் தேர்தலில்திமுக சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் ஜெயலட்சுமி.

ஜெயலட்சுமிக்கு சீட் தரும் தைரியம் திமுகவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+