அம்மா அழைப்புக்காக காத்திருக்கும் கார்த்திக்
சென்னை:
அதிமுகவிடமிருந்து சரியான பதில் வராவிட்டால் 11ம் தேதி இறுதி முடிவுஎடுக்கப்படும் என பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கார்த்திக்கூறியுள்ளார்.
அதிமுகவா, திமுகவா என்பதில் பெரும் குழப்பமடைந்த காரணத்தால் இப்போதுஎந்தக் கூட்டணியிலும் சேர முடியாத இக்கட்டான நிலையில் உள்ளார் கார்த்திக்.திமுக கூட்டணியை கார்த்திக் விரும்பினாலும் அவர் சார்ந்த பார்வர்ட் பிளாக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அதிமுக அபிமானிகள் என்பதால்அதிமுக கூட்டணியில் சேருவதே நல்லது என்று கட்சியினர் அவரை வற்புறுத்தினர்.
வேறு வழியின்றி வற்புறுத்தலுக்குப் பணிந்த கார்த்திக், திமுகவிடம் இருந்து தூரவிலகியதோடு அதிமுக கூட்டணியில் சேரத் தயாராக இருப்பதாகவும், அதிமுககூட்டணியில் மட்டுமே சேருவோம் என்றும் அறிக்கை விட்டார், பேட்டி தந்தார்,போயஸ் கார்டனுக்கு தூதும் அனுப்பினார்.
ஜெயலலிதாவை சந்திக்க காத்திருப்பதாகவும், அவரது அழைப்பு வந்தால் உடனடியாகசென்று சந்தித்து கூட்டணியில் சேருவோம் என்றும் கார்த்திக் தொடர்ந்து கூறிவருகிறார்.
ஆனால் ஜெயலலிதாதான் அழைப்பதாதக் தெரியவில்லை. இதற்குக் காரணம்கார்த்திக்கால் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட சந்தானம்.
அதிமுகவின் டிரம்செட்டான சந்தானம் ஆரம்பம் முதலே அதிமுகவுடன் தான் கூட்டணி என்று கூறிவந்தார். ஆனால், அவரை ஓரங்கட்டிய கார்த்திக் கூட்டணி குறித்து அவர் முடிவெடுக்க முடியாது எனறார்.
இது அதிமுகவுக்கு எதிரான சிக்னலைத் தந்தது. இதனால் கார்த்திக்கை அக் கட்சி ஒதுக்கிவைத்தது.
ஆனாலும் கார்த்திக்கால் அதிமுகவுக்கு வரும் முக்குலத்தோர் வாக்குகளில் ஓட்டைவிழும் என அஞ்சும் சசிகலாவின் கணவர் நடராஜன், கார்த்திக்-சந்தானம் இடையேசமாதானம் செய்து வைத்து அதிமுகவுடன் அவர்களை கூட்டணி அமைக்க வைக்கமுயன்றார்.
ஆனால், நடராஜனை இந்த விஷயத்தில் ஒதுங்கியிருக்குமாறு அதிமுக தலைமைகூறிவிட்டதால், அவரும் ஒதுங்கிவிட்டார்.
இந் நிலையில் கார்த்திக்குக்கு கெடு விதித்தார் சந்தானம். அதிமுகவுடன் கூட்டணிக்குப்போக கார்த்திக் தயாராக இல்லாவிட்டால் நானே முடிவெடுப்பேன் என்றார்.
தன்னை அதிமுகவுடன் சேர்ந்து சந்தானமும் குழப்புவதால் டென்சனில் இருக்கும்கார்த்திக் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், அதிமுகவின் அழைப்புக்காக நாங்கள் நீண்ட காலமாககாத்திருக்கிறோம். இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை. கட்சியின் மாநில மாநாடுதிருநெல்வேலியில் 12ம் தேதி நடைபெறுகிறது.
அதில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ்வருகிறார். பிஸ்வாஸ் உள்ளிட்ட தலைவர்களை, அதிமுக தலைவர்களுடன் சந்தித்துப்பேச வைக்க முயற்சிகள் நடக்கின்றன.
ஆனால் அதுகுறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாத நிலை உள்ளது.
அதிமுகவிடமிருந்து அழைப்பு வராவிட்டால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றநிலை உருவானால், பார்வர்ட் பிளாக் கட்சியின் இறுதி முடிவை வரும் 11ம் தேதிஎடுத்து, 12ம் தேதி மாநாட்டில் பிஸ்வாஸ் அறிவிப்பார்.
18 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் எங்களுக்கு பலம் உள்ளது. 25 முதல் 30தொகுதிகள் வரை ஜெயிக்கக் கூடிய தொகுதிகளாக நாங்கள் அடையாளம்கண்டுள்ளோம். அந்த அடிப்படையிலேயே கூட்டணி குறித்துப் பேசுவோம் என்றார்கார்த்திக்.
கார்த்திக் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க, உசிலம்பட்டி மட்டும் போதும்மா.. நான்கூட்டணிக்கு ரெடி என்று அதிமுகவுடன் தனி டிராக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்சந்தானம்.












Click it and Unblock the Notifications