முஸ்லீம் லீக் தலைவருக்கு புதுச் சிக்கல்!
சென்னை:
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர்காதர் மொஹைதீனுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது எம்.பி. பதவிபறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றது. அக்கட்சிக்கு ஒரு சீட்கொடுக்கப்பட்டது. வேலூரில் கட்சித் தலைவர் காதர் மொஹைதீன் போட்டியிட்டார்.முஸ்லீம் லீக் தலைவராக இருந்தாலும், அவர் உதயசூரியன் சின்னத்தின் கீழ்தான்போட்டியிட்டார். அதாவது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அவர் திமுகவேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது நாடாளுமன்றத்தில் காதர் மொஹைதீன் திமுக எம்.பியாகத்தான்கருதப்படுகிறார். விதிப்படி அப்படித்தான் அவர் நடத்தப்படுவார்.
இந் நிலையில், சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர்கருணாநிதியுடன் நேற்று காதர் மொஹைதீன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதில்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொஹைதீனாகிய நான் ...என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இது காதர் மொஹைதீனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. திமுக சின்னத்தின் கீழ்போட்டியிட்டு வென்ற காதர் மொஹைதீன், இப்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சித் தலைவர் என்று கூறி திமுகவுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதால் அது தேர்தல்ஆணையத்தின் விதிமுறையை மீறும் செயலாகிறது.
அதாவது, இந்தியத் தேர்தல் சின்ன சட்டம், பிரிவு 8, 3 வது உட்பிரிவின்படி,அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம், அக்கட்சிவேட்பாளரைத் தவிர வேறு யாருக்கும் ஒதுக்கப்படக் கூடாது.
அக்கட்சியின் வேட்பாளர் குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடாவிட்டாலும் கூடவேறு யாருக்கும் அந்த சின்னம் ஒதுக்கப்படக் கூடாது. அது தேசியக் கட்சியாகஇருந்தாலும் சரி, மாநிலக் கட்சியாக இருந்தாலும் சரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்குரியசின்னத்தை வேறு எந்த வேட்பாளருக்கும் ஒதுக்க முடியாது.
இவ்வாறு அந்த சட்டப் பிரிவில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, 13வது பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தின் கீழ்போட்டியிட வேண்டுமானால், அந்த வேட்பாளர் சம்பந்தப்பட்ட கட்சியின்அடிப்படை உறுப்பினர் என்பதற்கான அத்தாட்சி சான்றிதழை அந்தக் கட்சியின்தலைவரிடமிருந்தோ, செயலாளரிடமிருந்தோ அல்லது அதிகாரம் மிக்க நிர்வாகிஒருவரிடமிருந்தோ பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று தெளிவாக கூறுகிறதுவிதிமுறை.
எனவே திமக சின்னத்தில் போட்டியிட வேண்டுமானால் அவர் திமுக உறுப்பினராகஇருந்தால்தான் முடியும். அந்த அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலில்உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட காதர் மொஹைதீன் திமுக உறுப்பினர் அந்தஅந்தஸ்தில்தான் போட்டியிட்டு எம்.பி. ஆகியுள்ளார்.
அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர், வேலூர் தொகுதிக்கான திமுக வேட்பாளர்என்ற சான்றிதழை திமுக தலைவர் என்ற முறையில் கருணாநிதி கொடுத்துள்ளார்.அதன் அடிப்படையில்தான் மொஹைதீனுக்கு உதயசூரியன் ஒதுக்கப்பட்டது.
அதே 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் கைசின்னத்தின் கீழ் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அப்போது அவர்காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை நடத்தி வந்தார். தேர்தலில்போட்டியிடுவதற்கு முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ்கட்சியின் அடிப்படை உறுப்பினரானார்.
அதன் பின்னரே சிவகங்கை தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டார்.ப.சிதம்பரம் கை சின்னத்தின் கீழும், காதர் மொஹைதீன் உதயசூரியன் சின்னத்தின்கீழும் போட்டியிடுவதற்கு அப்போதே அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் உண்மையை விளக்கி தெளிவுபடுத்தினார்.வெற்றிக்குப் பின்னர் அவரது கட்சி காங்கிரஸுடன் இணைந்து விட்டது. எனவேசிதம்பரம் விஷய்தில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் காதர் மொஹைதீன்விஷயத்தில்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இப்போது சட்டசபைத் தேர்தல் ஒப்பந்தம் தொடர்பாக கையெழுத்துப் போட்டுள்ளகாதர் மொஹைதீன் தன்னை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் என்று கூறிகையெழுத்திட்டுள்ளது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றமாகும் எனகூறப்படுகிறது.
முஸ்லீம் லீக் தலைவர் என்று கையெழுத்திட்டுள்ளதால் அவர் திமுகவிலிருந்து விலகிவிட்டாரா அல்லது மஸ்லீம் லீக் கட்சியில் மீண்டும் இணைந்து விட்டாரா என்றகேள்வி எழுகிறது.
திமுகவிலிருந்து விலகி முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக மீண்டும் ஆகி விட்டார்என்றால் அது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி குற்றமாகும். அவரது எம்.பி.பதவியைப் பறிக்க இது வகை செய்கிறது.
இல்லை, முஸ்லீம் லீக் தலைவராகவே தான் தொடர்வதாக மொஹைதீன்தெளிவுபடுத்தினால், வேலூர் தொகுதியில் திமுக சின்னத்தின் கீழ் போட்டியிட்டதுதேர்தல் சின்னச் சட்டப்படி குற்றமாகும்.
இந்தப் பிரச்சினையை காதர் மொஹைதீன் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதெரியவில்லை.












Click it and Unblock the Notifications