விஜயகாந்த் ரசிகர்கள் ஆவேசம்-கொடிகள் எரிப்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கிராமத்திற்கு பிரசாரம் செய்யவிஜயகாந்த் வராததால் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்து ஆத்திரமடைந்ததொண்டர்கள் கோபமடைந்து, கட்சிக் கொடிகளை கிழித்து போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட விஜயகாந்த்,வியாழக்கிழமை நெல்லை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். 3நாட்கள் இவர் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சேரன்மாதேவி, களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் அவர் வேனில்இருந்தபடியே பிரசாரம் செய்தார்.

கூடங்குளம் அருகே கடற்கரையோர கிராமங்களில், மெயின்ரோட்டில் இருந்தபடியேவிஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

இதைத் தொடர்ந்து கூத்தங்குழி கிராமத்துக்கு சென்றார். அங்கும் மெயின்ரோட்டில்இருந்தபடியே பிரசாரம் செய்தார். ஆனால் ஊருக்குள் வருமாறு பொதுமக்கள்கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் நேரமின்மை காரணமாக இத்துடன் பேச்சை முடித்துக் கொள்வதாக கூறிவிட்டு திசையன்விளை நோக்கி விஜயகாந்த்தின் கார் பறக்கத் தொடங்கியது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், தொண்டர்களும் ஆவேசமடைந்து தேசியமுற்போக்கு திராவிட கழக கொடிகளை கிழித்து தீ வைத்து எரித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+