நாடார்களை வளைக்க அம்மா ரெடி!
சென்னை:
திமுக மீது கடும் கோபத்தில் இருக்கும் நாடார் சமுதாயத்தின் சார்பாக தனிக் கட்சிதொடங்கப்பட்டால் அந்தக் கட்சிக்கு கணிசமான தொகுதிகளைத் தர அதிமுக தயாராகஇருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் ரசிகர் மன்ற மாநாடு நடந்தது. இதில்பேசிய அத்தனை பேரும், நாடார் சமுதாயத்தினருக்கு திமுக துரோகம் இழைத்துவிட்டது.வெங்கடேச பண்ணையாரின் மரணத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுஅவருடைய மனைவிக்கு எம்.பி. சீட் கொடுத்து, நாடார் சமுதாயத்தினரின் வாக்குவங்கியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது.
ஆனால் மத்திய அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தினர் ஒருவருக்குக் கூடஅமைச்சர் பதவியை வாங்கித் தர கருணாநிதியும், காங்கிரஸ் கட்சியும்முயற்சிக்கவில்லை.
இதன் மூலம் நாடார் சமுதாயத்தினரை கருணாநிதி முழுமையாக புறக்கணித்துவிட்டார். தனது கட்சி எம்.பியாக உள்ள நடிகர் சரத்குமாரையும் அவர்கண்டுகொள்ளாமல் ஓரம் கட்டி வைத்துள்ளார்.
இதற்கெல்லாம் வரும் சட்டசபைத் தேர்தலில் நாடார் சமுதாயத்தினர் தக்க பதிலடிகொடுப்பார்கள், சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று ஆவேசமாக பேசினர்.
இவர்களின் கோபத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் சரத்குமார் பேசுகையில்,எனக்கும் சமுதாய உணர்வு உண்டு. அதை நான் மதிக்கிறேன். உங்களது ஆதங்கத்தைகருணாநிதியிடம் தெரிவிப்பேன் என்றார்.
தனது பலத்தை திமுகவுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கில்தான் தூத்துக்குடியில்ரசிகர் மன்ற மாநாடு என்ற பெயரில் நாடார் சமுதாய மாநாட்டையே அவர்நடத்தியதாக திமுக கருதுகிறது.
இந் நிலையில், நாடார் சமுதாயத்தினர் மத்தியில் நிலவும் கோபத்தை தனக்குசாதகமாக பயன்படுத்திக் கொள்ள அதிமுக முடிவு செய்துள்ளது.
நாடார் சமுதாயம் சார்பில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டால், அக்கட்சிக்குகணிசமான இடங்களை ஒதுக்க ஜெயலலிதா தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நாடார் இன அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலம் சில முக்கியநாடார் சமூக விஐபிக்களை அதிமுக அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரத்குமார் தலைமையிலேயே புதிய கட்சி அமைக்கப்பட்டால் அந்தக் கட்சிக்கு உரியமரியாதை, முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விரும்புகிற அளவுக்கு தொகுதிகளைத் தரஜெயலலிதா தயாராக உள்ளதாகவும் அதிமுக தரப்பில் இருந்து தகவல்தரப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications