உதயமானது கல்வி மான்களின் ஜாதிச் சங்கம்!
சென்னை:
கல்வித் துறையில் சிறந்து விளங்கும் முக்கியப் பிரமுகர்களை உள்ளடக்கிய ஜாதிச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சைவ பிள்ளைமார், துளுவ வேளாளர்,முதலியார்கள் சங்கங்களை இணைத்து புதிதாக தமிழ்நாடு வேளாளர் பேரவை என்றகூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் தலைவராக வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஜி.விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு ஜாதியினருக்கும் நூற்றுக்கணக்கான சங்கங்கள் உள்ளன.இவற்றில் சில ஜாதிச் சங்கங்கள் அரசியல் கட்சிகளாக உருவெடுத்துள்ளன.
பாமக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், மக்கள் தமிழ்தேசம் என இவற்றின் எண்ணிக்கையும் நீளமானது. இந்த வரிசையில், புதிதாகதமிழ்நாடு வேளாளர் பேரவை என்ற ஜாதிச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜி.விஸ்வநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகம் முழுவதும் உள்ள சைவ பிள்ளைமார், துளுவ வேளாளர், முதலியார்வகுப்பினரையும், உட் பிரிவுகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும்நோக்கத்துடன் இந்தப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பெயர்களில் சிதறிக் கிடக்கும் வேளாளர் சமூகத்தினரில் சிலர் முற்பட்டவகுப்பினராகவும், சிலர் பிற்பட்ட வகுப்பினராகவும் உள்ளனர். இவர்கள்அனைவரையும் வேளாளர் என்ற ஒரே பிரிவின் கீழ் கொண்டு வந்து மிகவும் பிற்பட்டவகுப்பினராக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
இந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.
மே 8ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடமாட்டோம். எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவும் அளிக்க மாட்டோம். இது அரசியல்கலப்பற்ற சமூக அமைப்பு.
இந்த அமைப்பில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். எனவே அந்தந்த தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின்தகுதியைப் பார்த்து அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை எங்களது உறுப்பினர்களுக்குவழங்கப்பட்டுள்ளது.
கல்வி, வேலை வாய்ப்பில் வேளாளர் சமூகத்தினர் உயர் நிலைக்கு வர இந்த பேரவைபாடுபடும். இதுதொடர்பான திட்டங்கள் விரைவில் கூட்டப்படவுள்ள செயற்குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் விஸ்வநாதன்.
இந்த பேரவையில், முன்னாள் நீதிபதிகள் வள்ளிநாயகம், பாஸ்கரன், மனோன்மணீயம்சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சண்முக சுந்தரம், அன்னைதெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் யசோதா சண்முக சுந்தரம்,
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கலாநிதி, பிரபலஇதயவியல் மருத்துவர் டாக்டர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பல பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications