20ம் தேதி திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு
சென்னை:
தொகுதிகளை ஒதுக்குவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர்கருணாநிதி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கான 3 இடங்கள் இறுதியாகி விட்டது. இக்கட்சி3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.இதுகுறித்து கட்சித் தலைவர் காதர் மொஹைதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,ராமநாதபுரம், அரவாக்குறிச்சி ஆகிய தொகுதிகள் முடிவாகி விட்டன. இன்னும் ஒருதொகுதி மட்டுமே பாக்கி உள்ளது என்றார்.
அதுவும் கூட கிட்டத்தட்ட முடிவாகி விட்டதாகத் தெரிகிறது. இன்னொரு தொகுதிவாணியம்பாடியாக இருக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள் தொடர்பாக மாநிலச் செயலாளர்வரதராஜன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் திமுக தலைவர்களுடன்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பாமக சார்பில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான குழுகருணாநிதியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதன் முன்னேற்றம்குறித்து மணி கூறுகையில்,
இன்னும் ஒருமுறை உட்கார்ந்து பேசினால் தொகுதிகள் இறுதியாகி விடும்.அந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். மிகவும் சுமூகமான முறையில்பேச்சுவார்த்தை உள்ளது என்றார்.
பாமக இந்த முறை தென் மாவட்டங்களில்சில தொகுதிகளையும், சில தனித்தொகுதிகளையும் கோரியுள்ளதாகத் தெரிகிறது. தென் மாவட்டத் தொகுதிகளைஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அந்தக் கட்சி கேட்கும தொகுதிகளில்90 சதவீத தொகுதிகள் கிடைக்கவுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் காங்கிரஸ் தான் தனது விருப்பத் தொகுதிகளை திமுகவிடம் தரவில்லை.அவர்களுக்காக கருணாநிதி காத்துக் கொண்டுள்ளார்.
இந் நிலையில் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் (கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வஇல்லம்) தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தேர்தல் பணிக் குழுவின்ஆலோசனைக் கூட்டம், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் கர்நாடகமுதல்வருமான வீரப்ப மொய்லி தலைமையில் நாளை நடைபெறுகிறது.
திமுக கூட்டணியில் 48 இடங்களைப் பெற்றுள்ளது காங்கிரஸ்.
டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் திமுகவிடம் கோர வேண்டிய தொகுதிகள் குறித்துஆலோசிக்கப்படுகிறது. அதில் எல்லா கோஷ்டிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
பின்னர் வரும் ஞாயிற்றுக்கிழமை மொய்லி மற்றும் தேர்தல் பணிக் குழுவினர்கருணாநிதியை சந்தித்து விருப்பப் பட்டியலைக் கொடுக்கிறார்கள்.
அனைத்துக் கட்சிகளுடனும் விரைவில் பேச்சுவார்த்தையை முடித்து 20ம் தேதியன்றுஇறுதி தொகுதிப் பட்டியலை கருணாநிதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications