ஜெவை பாராட்டும் நட்ராஜ்: திமுக ஆட்சேபம்
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நட்ராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப்புகழ்ந்து பேசியிருப்பது தேர்தல் நடத்தை விதிமறைகளை மீறும் செயலாகும் என்றுதேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் செய்துள்ளது.
இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்ஏ.ராஜா தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டனுக்கு அனுப்பியுள்ள புகார்கடிதத்தில்,தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மார்ச் 8ம் தேதி ஆங்கிலப் பத்திரிக்கைஒன்றுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நட்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், மகளிர் தினத்தின்போது, எனது மனதில் சிறந்த பெண்மணியாகத்தோன்றுபவர் முதல்வர் ஜெயலலிதாதான். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தான்மேற்கொண்டுள்ள பணியிலும் சிறந்து விளங்குபவரே சிறந்த பெண்மணி.
அந்த வகையில் ஜெயலலிதாவை அதற்குச் சரியான உதாரணமாகக் கூறலாம்.ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறார் ஜெயலலிதா என்றுகூறியுள்ளார் நட்ராஜ்.
இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறலாகும். இப்படிப்பட்ட காவல்துறைஆணையரை வைத்துக் கொண்டு எப்படி சென்னையில் தேர்தல் நியாயமாகவும்,நேர்மையாகவும் நடைபெறும் என எதிர்பார்க்க முடியும்?
சென்னை மாநகர காவல்துறையின் கீழ் 20 தொகுதிகள் வருகின்றன. எனவே 20தொகுதிகளிலும் மாநகர காவல்துறை ஆணையர் நட்ராஜின் பொறுப்பில் தேர்தல்நடந்தால் நிச்சயம் அதிமுகவுக்கு சாதகமாகத்தான் காவல்துறை நடந்து கொள்ளும்.
எனவே அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்ராஜா.
ஆற்காடு புகார்:
இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சியும், அரசும்தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதைக் கண்டும் காணாமலும் உள்ளதுதேர்தல் ஆணையம் என்று திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் 19 லட்சம் போலி வாக்காளர்களைஆளுங்கட்சி சேர்த்தது. இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகதலைவர் கருணாநிதி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அப்போது 13 லட்சம்வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.
போலி வாக்காளர்களை ஒட்டுமொத்தமாக சேர்த்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என தேர்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியது.
தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. ஆனால்இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர், அரசு இயந்திரத்தின் துணையோடுபல்வேறு அத்துமீறல்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்து வருகின்றனர்.ஆனால் இவற்றை தேர்தல் ஆணையம் கண்டும், காணாமலும் உள்ளது.
அமைச்சர்கள் பலர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பல்வேறு உதவிகளைவழங்கி விதிகளை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் தடுக்கதேர்தல் ஆணையம் முன் வராவிட்டால், ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கையைஇழந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
சென்னையில் பல தொகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தனது அரசு வீட்டில் வைத்துஅமைச்சர் ஜெயக்குமார் தையல் மெஷின்கள், வேட்டி சேலைகளை இலவசமாகவழங்குவதோடு அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்குமாறு கோரி வருவதாக திமுக தரப்பில்புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications