கருத்து கணிப்பு: குட்டை உடைக்கும் கருணாநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தமிழக காவல்துறையின் உளவுத்துறை மூலம்வெளியாகப் போகும் அதிமுக ஆதரவு விஷமப் பிரசாரங்களை பொது மக்களும்,ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினரும் நம்ப வேண்டாம் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு இதுவரைநான்கு கருத்துக் கணிப்புகளை நடத்தி அதை ஜெயலலிதாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் அதிமுகவுக்கு சாதகமாக நிலைமைஇல்லை என்பதையே காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள்கிடைத்துள்ளன.

கடைசியாக அவர்கள் ஒரு கருத்துக் கணிப்பை எடுத்து அதை ஜெயலலிதாவின்பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கருத்துக் கணிப்பின் முகவுரையில்சொல்லியிருப்பது என்னவென்றால்,

அதிமுகவுடன், மதிமுக கூட்டணி வைத்துள்ளதன் மூலம் மிகப் பெரிய அளவில்மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதற்கு முந்தைய முடிவுகளிலும் பெரிய மாற்றம்ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த உளவுத்துறை முடிவுகளை ஆளும்கட்சித்து சாதமாகத் திரித்து கருத்துக் கணிப்புஎன்ற பெயரில் ஆளும் தரப்புக்கு சாதமாக ஒரு சில ஏடுகளை வளைத்துப் போட்டுவெளியிட முயற்சித்து வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் வெளியாகவுள்ள அந்தவிஷமப் பிரசாரத்தைக் கண்டு பொது மக்களும், கூட்டணிக் கட்சியினரும் துளிக் கூடகவலைப்படாமல் திமுக கூட்டணியின் வெற்றியை மட்டும் மனதில் வைத்துசெயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

காவல்துறையில் இருக்கும் தனது காண்டாக்டுகள் மூலமாக அங்கு நடக்கும் விஷயங்களை அவ்வப்போதுகறந்து வருகிறார் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிச்சேரி காங். பிரதிநிதி சந்திப்பு:

இந் நிலையில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதுதொடர்பாக புதுவைக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிப்பிரசாத் கருணாநிதியைசந்தித்துப் பேசினார்.

தமிழகத்தைப் போலவே புதுவையிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.புதுவைக்கான அதிமுக கூட்டணி முடிவாகி விட்டது. ஆனால் திமுக கூட்டணிதொடர்பாக இதுவரை எந்த சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் புதுவைக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிபிரசாத் இன்று சென்னைவந்து கருணாநிதியை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல் கட்டப் பேச்சுவார்த்தைநடந்துள்ளது. புதுவையில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி நீடிக்கிறது. மற்றகட்சிகளுடனும் கலந்து பேசி இறுதி முடிவை எடுப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+