நாற்காலி சுகமானதல்ல: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என்னை, கோட்டை நாற்காலியில் அமர வைக்க எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அந்த நாற்காலி சுகமானதல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழ் ஓசை என்ற பெயரில் புதிய நாளிதழ்தொடங்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில்நடந்தது.

முதல் இதழை கருணாநிதி வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

எனக்கும், ராமதாஸுக்கும் ஆரம்பத்தில் தகராறில்தான் பழக்கம் ஏற்பட்டது. நாளாகநாளாக அந்த தகராறு, பதப்பட்டு பதப்பட்டு இப்போது நாங்கள் இருவரும் தமிழ்ச்சமுதாயத்திற்காக எங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கே புதிய மாற்றம் வர வேண்டும், கோட்டை நாற்காலியில் என்னை அமர வைக்கவேண்டும் என்று எல்லோரும் பேசினார்கள், ஆசைப்படுகிறார்கள்.

கோட்டை நாற்காலியில் என்னை உட்கார வைப்பது மட்டும் மாற்றமல்ல, அந்தநாற்காலி சுகமானதுமல்ல.

என்னைப் பொருத்தவரை கோட்டை நாற்காலி என்பதை தன்மான இயக்கநாற்காலியாகவே கருதுகிறேன். தமிழர்களை வாழ வைக்க நல்ல மாற்றம் வரவேண்டும். மக்களும் இதையேதான் விரும்புகிறார்கள்.

அந்த நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியாக தமிழ் ஓசை வெளிவந்திருக்கிறது என்றார் கருணாநிதி.

விழாவில் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக தலைவர்ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+