அதிகாரியை செருப்பால் அடிக்க முயன்ற மாஜி!

Subscribe to Oneindia Tamil

சென்னை :

தலைமைச் செயலகத்தில் அதிகாரியை, செருப்பால் அடிக்கப் பாய்ந்தார் மாஜிகாங்கிரஸ் எம்.எல்.ஏ. அழகர். அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயக்கம் போட்டு கீழேவிழுந்தார். இதனால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி சட்டசபைத் தொகுதியின் மாஜி உறுப்பினரான அழகர், இன்று காலைதலைமைச் செயலகத்தில் உள்ள 10வது மாடியில் உள்ள வீட்டு வசதி வாரியஅலுவலகத்திற்குச் சென்றார்.

அங்கு துறையின் துணைச் செயலாளர் ராஜேந்திரனை சந்தித்துள்ளார். அவரிடம்,எனக்கு வீடு ஒதுக்குமாறு வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவைக் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏவை அமர வைத்த அதிகாரி ராஜேந்திரன், சார், இப்போது தேர்தல்நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே இப்போது வீடு ஒதுக்கீடுதொடர்பான ஆணையை வழங்க முடியாது என்று அமைதியாகக் கூறியுள்ளார்.

இதனால் அழகர் கொந்தளித்துள்ளார். அமைச்சரே கொடுக்கச் சொல்லியிருக்கிறார், நீஎப்படிய்யா கொடுக்க மறுக்கலாம் என்று ஏக வசனத்தில் ஆரம்பித்த அழகர்தாறுமாறாகப் பேசத் தொடங்கினார். ஆபாசமாகவும், ஒருமையிலும் பேசிய அழகர்,ஒரு கட்டத்தில் கடும் கோபம் கொண்டு காலில் போட்டிருந்த செருப்பைக் கழற்றிஅதிகாரியை அடிப்பதற்காக பாய்ந்துள்ளர்.

சர்க்கரை வியாதிக்காரான அந்த அதிகாரி, பயந்து போய் வியர்த்து விறுவிறுக்க உடல்நடுங்க கீழே விழுந்து விட்டார். மூர்ச்சையாகிப் போன அதிகாரியின் நிலையைப்பார்த்தும் பதறி ஓடிவந்த ஊழியர்கள் அழகரை பிடித்து ஓரங்கட்டி நிறுத்தினர்.

அவரை ஊழியர்கள் கோபமாக நெருங்கியதையடுத்து பயந்து போன அழகர்அங்கிருந்து ஓடி விட்டார். நடந்த சம்பவம் குறித்து துறையின் உயர் அதிகாரியிடம்ஊழியர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும்எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

தலைமைச் செயலகத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் செருப்புஅட்டகாசத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

காங் இருந்தா ஜெயிச்சுறலாம்

இந் நிலையில் காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதோ அந்தக்கூட்டணிதான் தேர்தல்களில் வெற்றி பெறும் என்பது தமிழக அரசியல் வரலாறு எனதமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

அவரது பேட்டி:

வைகோ விலகலால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உண்மையில்,காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதோ அந்தக் கூட்டணிக்குத்தான்தேர்தல்களில் வெற்றி கிடைக்கும். இது கடந்த கால வரலாறு. எனவே நாங்கள்தற்போது இடம்பெற்றுள்ள திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும்.

அதிமுகவுக்கு ஆதரவாக இங்கு அலை வீசுவதாக கூறுகிறார்கள். அப்படியெல்லாம்எந்த அலையும் கிடையாது. அதிமுகவும் உளவுப் பிரிவினரும் பரப்பி வரும் பொய்அது. அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், படித்த இளைஞர்கள்,நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் அதிமுக ஆட்சியால்பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அதிருப்தி அலைதான் வீசி வருகிறது.

அதிமுக அரசின் தோல்விகளையும், அதனால் மக்கள் பட்ட வேதனைகளையும்சொல்லி பிரசாரம் செய்தாலே போதும்.

காங்கிரஸ் கட்சி பழம் பெரும் கட்சி, நன்கு வளர்ந்து விட்ட கட்சி. எனவேஇதுபோன்ற பெரிய கட்சியில் கோஷ்டிகள் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கட்சியின்வளர்ச்சியையே இது காட்டுகிறது என்றார் அவர்.

2 நாளில் 3,000 விண்ணப்பம்:

காங்கிரஸ் சார்பில் சட்டசபைத் தேர்தலில் நிற்க சீட் கேட்டு 2 நாட்களில் 3,000விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 17ம்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.

விண்ணப்பங்களை இலவசமாக தரலாம் என காங்கிரஸ் தலைமை அறிவித்ததால்,சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் எமக்கூட்டம் கூடியது. நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து விண்ணப்பங்களை நிரப்பிக்கொடுத்தனர்.

கடந்த இரண்டே நாட்களில் 3,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளனவாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+