For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதல் படத்தை விஞ்சிய காதல் ஜோடி!

By Staff
Google Oneindia Tamil News

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, வீட்டைவிட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்ட பின்னர் என்ன செய்வது என்றுதெரியாமல், பத்து நாட்களாக பேருந்தில் பயணித்தும், தெருக்களில் சுற்றியும்,கடைசியில் காவல் நிலையத்தில் சரணடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

காதல் படத்தில் ஒரு காட்சி வரும். மதுரையிலிருந்து சென்னைக்கு ஓடி வரும் காதல்ஜோடியான பரத்தும்-சந்தியாவும், சென்னையில் தங்க இடம் இல்லாமல், இரவைஎப்படிக் கழிப்பது என்று தெரியாமல், செகண்ட் ஷோ பார்த்துவிட்டு,சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு பஸ்ஸில் சென்று மீண்டும் அங்கிருந்து கிளம்பிசென்னைக்கு வந்து சேருவார்கள்.

ஆனால் இவர்களை மிஞ்சி விட்டது நிலக்கோட்டையைச் சேர்ந்த மனோஜ்- ஜீவாகாதல் ஜோடி.

மனோஜ் ஒரு ஆட்டோ டிரைவர். அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்தான் ஜீவா.இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் வீட்டிற்கு தெரிந்தால் வகுந்துவிடுவார்கள்என்பதால் ரகசியமாக வளர்ந்தது காதல்.

இந் நிலையில் கடந்த 2ம் தேதி மதுரைக்கு வண்டியேறியது மனோஜ்-ஜீவா ஜோடி.மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர். அங்கு வைத்துஜீவாவுக்கு தாலி கட்டினார் மனோஜ். பின்னர் மதுரையை வலம் வந்தனர்.

அப்புறம் என்ன செய்வதென்று தெரியாமல் திருப்பூர் செல்லும் பேருந்தில் ஏறிஅமர்ந்தனர். அது திருப்பூர் சென்றது. அங்கு படம் பார்த்தனர். பின்னர் திருப்பூரைச்சுற்றிப் பார்த்துள்ளனர்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் மதுரைக்குத் திரும்பினர்.

மறுபடியும் கோவில், மறுபடியும் நகர்வலம். அது முடிந்ததும், கோவைக்கு பஸ்சைப்பிடித்தனர். கோவையை அடைந்ததும், கோவையை சுற்றிப் பார்த்தனர். மறுபடியும்மதுரைக்குத் திரும்பினர்.

இம்முறை சற்றே வித்தியாசமாக திருப்பரங்குன்றம் போனார்கள். அங்கு சாமிகும்பிட்டு முடித்ததும், மறுபடியும் திருப்பூர் சென்றனர்.

திருப்பூரைச் சுற்றி முடித்ததும் கையில் இருந்த காசைப் பார்த்தபோது பகீர்என்றிருந்தது. காரணம் பணம் கரைந்து போயிருந்தது.

என்ன செய்யலாம் என்று ஒரு இடத்தில் உட்கார்ந்து முதல் முறையாக சீரியஸாகயோசித்துப் பார்த்தனர். சரி வருவது வரட்டும் சொந்த ஊருக்கேப் போகலாம் என்றஉருப்படியாக முடிவெடுத்த இருவரும், நிலக்கோட்டைக்கு வண்டி ஏறினர்.

ஊருக்கு முன்பாகவே இறங்கிக் கொண்ட இருவரும், அருகில் உள்ள விளாம்பட்டிகாவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

நடந்ததைக் கூறி அழுத அவர்களை அங்கிருந்த போலீஸார் நிலக்கோட்டை காவல்நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர். போலீஸார் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் ஆனத ஆகிப் போச்சு.. இனி என்ன என்றுசமாதான உடன்பாடுக்கு இரு குடும்பத்தாரும் வரவே, போலீஸாரே மாலை வாங்கிவந்தனர்.

போலீஸ் முன் மனோஜும், ஜீவாவும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர்பெற்றோருடன் வீடு திரும்பினர்.

காதல் வந்தால்....

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X