ஜெவுக்கு ஜால்ரா: நடராஜ் அதிரடி மாற்றம்!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதாக வந்த புகாரின் அடிப்படையில்,சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் மாற்றப்பட்டுள்ளார்.இதுதொடர்பான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் ஒரு இதழுக்கு அளித்திருந்த மகளிர் தின பேட்டியில், தற்போதையநிலையில், பெண்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்பவர் முதல்வர் ஜெயலலிதாதான்.அவரது சாதனைகள், வெற்றிகள், நடவடிக்கைகளை ஒவ்வொரு பெண்ணும்கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்றார்.அனைததுப் பெண்களுக்கும் சிறந்த ரோல் மாடலாக ஜெயலலிதா விளங்குகிறார்.மொத்தத்தில் தமிழகத்தின் லட்சியப் பெண்மணியாக ஜெயலலிதா திகழ்கிறார் என்றுதான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதையே மறந்துவிட்டு ஜால்ரா அடித்தார்.
இது அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும். கிட்டத்தட்ட அதிமுகவுக்கு ஓட்டுகேட்பது மாதிரி இருந்தது அவரது முழுப் பேட்டியும்.
நடராஜின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 20 சட்டசபைத்தொகுதிகள் உள்ளன. அவர் ஆணையர் பதவியில் நீடித்தால், 20 தொகுதிகளிலும்நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கமுடியாது.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுகவைச் சேர்ந்தமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராசா, தலைமைத் தேர்தல் ஆணையர்பி.பி.டாண்டனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் நடராஜ் மீது உடனடிநடவடிக்கை எடுத்துள்ளது. அவரை ஆணையர் பதவியிலிருந்து இடமாற்றம்செய்துள்ள ஆணையம், தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் நடராஜஈடுபடுத்தப்படக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி கூறுகையில், எங்களுக்கு வந்தபுகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். சென்னை ஆணையர்மீது வந்த புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.
ஒரு மூத்த அதிகாரியிடமிருந்து, அதுவும் சென்னை போன்ற பெருநகரின் தலைமைப்பாதுகாப்பில் இருக்கும் ஒரு அதிகாரி இவ்வாறு பேசியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
புதிய ஆணையர் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பரிந்துரை செய்வார்.அதன் அடிப்படையில் புதிய ஆணையர் நியமிக்கப்படுவார். தேர்தல் காலம்என்பதால் விரைவில் நியமனம் மேற்கொள்ளப்படும் என்றார்.
கடந்த 2003ம் ஆண்டு முதல் முறையாக சென்னை மாநகர காவல்துறை ஆணையராகபணியாற்றினார் நடராஜ். பின்னர் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு விஜயக்குமார்ஆணையராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் மீண்டும் 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சென்னை மாநகரஆணையராக பணியாற்றி வந்தார். சென்னை மாநகர மக்களின் பாராட்டுக்களைப்பெறும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர் நடராஜ்.
ரவுடிகளின் அட்டகாசத்தை என்கவுண்டர்கள் இல்லாமலேயே அடக்கியவர் என்றபெருமை நடராஜுக்கு உண்டு. கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்து வரும்விபச்சார கிளப்களுக்கு முடிவு கட்டி அவர்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியவர்.
டிஸ்கோ கிளப்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தவர். சென்னை நகர போக்குவரத்துநெரிசலை பெருமளவு சரிப்படுத்தியவர் என ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகள்நடராஜுக்கு சாதகமாக உள்ளன.
ஆனால், காவல்துறையின் பல அதிகாரிகளைப் போலவே இவரும் அதிமுகவைச்சேர்ந்தவரைப் போலவே நடந்து கொண்டது அவரது பதவியை காவு வாங்கியுள்ளது.
இந் நிலையில் சென்னை மாநகரின் ஆணையராக கூடுதல் டிஜிபி ஆர்.என்.சவானிஅல்லது அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமாரே கூட நியமிக்கப்படக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications