கருத்து கணிப்புகளுக்கு தடையில்லை: நரேஷ்குப்தா
மதுரை :
செய்தி நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளை முழுமையாகத் தடை செய்யமுடியாது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாதெரிவித்துள்ளார்.
மதுரையில், 10 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நரேஷ் குப்தா இன்று தேர்தல்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிஉள்ளிட்டவை குறித்து ஆட்சித் தலைவர்களுடன் விவாதித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், செய்தி நிறுவனங்கள் வெளியிடும்தேர்தல் கருத்துக் கணிப்புகளை முழுமையாக தடை செய்ய டியாது. அதற்கான சட்டம்தற்போது இல்லை. சில கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்க முடியும்.
சாலைகள், பாலம் போன்ற பணிகளை புதிதாக தொடங்கக் கூடாது எனஅறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஏற்கனவே அந்தப் பணிகள்மேற்கொள்ளப்பட்டிருந்தால் அவற்றைத் தொடரலாம்.
வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய புதிய கடனுதவிகளை மத்திய, மாநில அரசுகள்வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் பொது இடங்களில் வைத்துள்ள பேனர்கள், விளம்பரங்களைஅகற்ற காலக் கெடு கொடுக்கப்பட்டது. பெரும்பாலானவை அகற்றப்பட்டு விட்டன.சில இடங்களில் இன்னும் உள்ளன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
அரசுப் பள்ளிகள், வாக்குச் சாவடிகளாக செயல்படும் பள்ளிகள், அரசுக்கட்டடங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை எழுதக் கூடாது என்றுஉத்தரட்டுள்ளோம் என்றார் குப்தா.
இக் கூட்டத்தில் ஆட்சித் தலைவர்களுடன், சிறப்பு தேர்தல் அதிகாரி சி.பி.சிங்கும்கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications