தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: ரஜினி அறிவிப்பு
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு இல்லை. எனவே ரசிகர்கள்தங்களது விருப்பம் போல வாக்களிக்கலாம் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த சில தேர்தல்களாக ஏதாவது ஒரு கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பதைவழக்கமாக்கியிருந்தார் ரஜினி. மொத்தம் மூன்று முறை அவர் வாய்ஸ்கொடுத்திருந்தாலும் ஒரே ஒரு முறைதான், அதுவும் முதல் முறை மட்டுமே மக்கள்அவருக்கு மதிப்பு கொடுத்தார்கள்.திமுக-தமாகா கூட்டணிக்கு ரஜினி கொடுத்த வாய்ஸ் அக் கூட்டணியின் வெற்றிக்குபெருமளவில் உதவியது.
அதன் பின்னர் கடந்த 2001ம் ஆண்டு தேர்தலின்போது மீண்டும் திமுகவுக்குஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ஆனால் அது எடுபடவில்லை. மாறாக அதிமுகமாபெரும் வெற்றியைப் பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாமக மீதுஇருந்த கோபத்தால், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஆதரவாக வாக்களியுங்கள் எனரஜினி வேண்டுகோள் விடுத்தார்.
வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டுவிட்டு அதிமுகவுக்குத் தான் ஓட்டு போட்டேன்என்று பேட்டி தந்தார்.
ஆனால் அப்போதும் அவரது பேச்சு எடுபடவில்லை. திமுக கூட்டணியே அமோகவெற்றி பெற்றது.
இதனால் அரசியலுக்கு கும்பிடு போட்டுவிட்டு சினிமாவில் மீண்டும் ஆர்வம் காட்டஆரம்பித்துவிட்டார். எப்போ வருவேன்.. எப்படி வருவேன்னு தெரியாது.. கரெக்டாவருவேன் போன்ற வசனங்கள் இல்லாமல் சந்திரமுகியில் நடித்தார்.
படமும் மகா வெற்றி பெற்றது. இப்போது முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதிஆகியோருடன் நல்லுறவைப் பேணி வருகிறார்.
ஆனால், ரஜினியின் முந்தைய வசனங்களால் அரசியல் ஆர்வம் தூண்டிவிடப்பட்டஅவரது ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக உள்ளது.
நான் அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று சொல்லி அவரது ரசிகர் மன்றத்தினர்மனதில் அரசியல் விதையைத் தூவியவர் இப்போது அதைப் பற்றி பேசாமல்இருப்பது அவர்களை எரிச்சலாக்கியுள்ளது.
நேற்று அரசியலுக்கு வந்த விஜய்காந்த் மடமடவென தனது ரசிகர் மன்றத்தினரைதேர்தலில் நிறுத்தி வரும் நிலையில், நம்ம தலைவர் நம்ப வச்சு இப்படிபண்ணிட்டாரே என்ற சோகத்தில் அவரது ரசிகர் மன்றத்தினர் உள்ளனர்.
இதனால் ஆங்காங்கே அவர்களாகவே ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தருவது,பாமகவினருடன் மோதுவது போன்ற வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
கோவையில் பாமகவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த ரஜினி, அகிலஇந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற பொறுப்பாளரான சத்திய நாராயணா மூலம்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சத்திய நாராயணா கூறியுள்ளதாவது:
தமிழகத்திலும், புதுவையிலும் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், அதுசட்டமன்றத் தேர்தலானாலும், நாடாளுமன்றத் தேர்தலானாலும், ரஜினிகாந்த் ஆதரவுயாருக்கு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுகிறது.
ரஜினி ஆதரவு யாருக்கு என்று அவர் தெரிவிப்பதற்கு முன்பாகவே, சில ரசிகர்கள்ரஜினிகாந்த் இவருக்கு நண்பர், அவருக்கு எதிரி, இவருக்கு ஆதரவு, அவருக்குஆதரவு இல்லை என்று சுவர் விளம்பரம் எழுதுவது, போஸ்டர் அடிப்பது,
இதைப் பற்றி விவாதிப்பதற்காக கூட்டம் போடுவது, சுயேச்சை வேட்பாளர்களைமன்றத்தின் சார்பில் நிறுத்த முடிவு எடுப்பது, பேட்டி அளிப்பது போன்றவற்றைசெய்வது தலைமை மன்ற கவனத்திற்கு வந்துள்ளது.
ரஜினி காந்த் யாருக்கும் எதிரியல்ல, அவருக்கும் யாரும் எதிரிகள் இல்லை. ரஜினிதற்போது சிவாஜி படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஆகையால் வரும்தேர்தலில் அரசியல் சம்பந்தமாக எந்த அறிக்கையும் அவரிடமிருந்து வராது.
அவர் அரசியல் பற்றி பேசவும் மாட்டார் என்பதை ரஜினிகாந்த் ஒப்புதலுடன்தலைமை மன்றம் தெரிவிக்கிறது.
ரஜினியின் அன்பு ரசிகர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகவும்,ஆதரவாளர்களாகவும் இருப்பது நீங்கள் அறிந்ததே. உங்கள் ஆதரவை தனிப்பட்டமுறையில் உங்களது விருப்பப்படி தெரிவித்துக் கொள்ளலாம். இது உங்களது உரிமை.
ஆனால் ரஜினி ரசிகர் மன்றம் என்ற பெயரிலோ, ரஜினிகாந்த் ரசிகர் என்ற பெயரிலோ,ரஜினி இவருக்கு எதிரி, அவருக்கு நண்பன், இவருக்கு ஆதரவு, அவருக்கு ஆதரவுஇல்லை என்றெல்லாம் மன்றம் சார்பில் கூட்டம் போடுவது, போஸ்டர் அடிப்பது,
பிட் நோட்டீஸ் அடிப்பது, சுவர் விளம்பரம் எழுதுவது, சுயேச்சை வேட்பாளர்களைநிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தாழ்மையுடன் தலைமைமன்றம் கேட்டுக் கொள்கிறது.
இதை மீறுபவர்கள் மன்றத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
தேவையில்லாத பிரச்சினைகளால் பாபாவுக்கு ஏற்பட்ட நிலைமை சிவாஜிக்கும்வந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையால் தான் ரஜினி தரப்பிலிருந்து இப்படிஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications