For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவை விட்டு வேகமாக விலகும் சரத்குமார்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடார் சமுதாயத்தினரை அங்கீகரித்து, அவர்களுக்கு அரசியல் பொறுப்புள்ளபிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியை வற்புறுத்தப்போவதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுவரை நான் எல்லோருக்கும் பொதுவானவன் என்று பேசி வந்த குமார், இப்போதுதிடீரென தனது சமுதாயத்துக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் தனக்கு இடம் தராதால், திமுகவில் நாடார்கள்ஒதுக்கப்படுவதாகக் கூறி சமீபத்தில், தூத்துக்குடியில் ரசிகர் மன்ற மாநாட்டைநடத்தினார்.

இதில் ரசிகர்கள் தவிர பல்வேறு நாடார் சமுதாய அமைப்பினரும் கலந்து கொண்டனர்.இதில் பேசிய அத்தனை பேரும் நாடர் சமுதாயத்தைப் புறக்கணிக்கும் திமுகவுக்குமறைமுகமாக கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசினர்.

அதில் சரத்குமார் பேசுகையில், எனக்கும் சமுதாய உணர்வு உண்டு. எனக்கு அமைச்சர்பதவி கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் உங்களிடம் உள்ளது. அதைகருணாநிதியிடம் எடுத்துச் சொல்வேன் என்று கூறியிருந்தார்.

குமார் தலைமையில் தங்களுக்கென ஒரு கட்சியை ஆரம்பிக்கவும் நாடார் சமூகதலைவர்கள் முயன்று வருகின்றனர்.

இந் நிலையில், சென்னை ஏவி.எம். ஸ்டுடியோ வளாகத்தில், தலைமகன்படப்பிடிப்பில் கலந்து கொண்ட சரத்குமார் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நாடார் சமுதாயத்துக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்று என் சமுதாயத்தினர்கருதுகிறார்கள். நானும், நாடார் சதாயத்தினருக்கு அரசியல் பொறுப்புள்ள பதவிகள்தர வேண்டும் என்ற எனது ஆதங்கத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.

சாதிக்கு ஒரு கட்சி, அதன் அடிப்படையில் பிரதிநிதித்துவம் என்று வருகையில்,ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நாமும் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும்என்று சிந்திக்கிற அளவுக்கு சூழ்நிலை வந்துள்ளது. அதே கட்டாயம் நாடார்களுக்கும்வந்துள்ளது.

நமது சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று என்னைச் சந்திக்கிறசமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

சாதி, மதம் கூடாது என்று கருதுபவன்தான் நான். அதேசமயத்தில் எனக்கும் சமுதாயஉணர்வு இருக்கிறது. அப்படி நினைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

எனவே கலைஞரைச் சந்தித்து, நாடார் சமுதாயத்தை அங்கீகரியுங்கள், அந்தசமுதாயத்திற்கும் உரிய அரசியல் பொறுப்புள்ள பிரதிநிதித்துவத்தை வழங்குங்கள்என்று கேட்பேன்.

வரும் தேர்தலில் முன்பு போல தொடர்ந்து பிரசாரம் செய்ய மாட்டேன். அதற்குகாலமும் இல்லை, நேரமும் இல்லை. எல்லா ஊர்களுக்கும் போய் பிரசாரம் செய்யமுடியாது. குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்வேன் என்றார்சரத்குமார்.

சரத்குமாரின் இந்தப் பேட்டி அவர் திமுகவை விட்டு வேகமாக விலகிக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறதா?

வணிகர் பேரவையின் அறிவிப்பு:

இந் நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில்234 தொகுதிகளிலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வேட்பாளர்கள்பெரும் நெருக்கடியைக் கொடுக்கப் போகிறார்கள் என பேரவையின் தலைவர்த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக என எந்தக் கூட்டணியும் தங்களை மதிக்காததால் கடுப்பாகிப் போனவணிகர் சங்கங்களின் பேரவை சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளது.

பேரவை சார்பில் சென்னை அண்ணா நகரில் அமுதா பாலகிருஷ்ணன் என்பவரும்,முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியான லட்சுமிகாந்தன் பாரதியும் தேர்தலில்நிறுத்தப்படவுள்ளதாக ர் போட்டியிடப் போவதாகவும் பேரவைத் தலைவர்வெள்ளையன் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

எங்களது நீண்ட கால கோரிக்கைகளை அரசும் நிறைவேற்றவில்லை, எதிர்க்கட்சிகளுகண்டு கொள்வதாக இல்லை. எனவேதான் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட முடிவு செய்தோம்.

234 தொகுதிகளிலும் எங்களது பேரவை வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளுக்கு கடும்அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்.

இன்று தொடங்கி 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். தேர்தல் பணிகள் தொடர்பாக இந்தக் கூட்டங்களில்விவாதிக்கப்படும்.

ஏப்ரல் 3ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறோம் என்றார் வெள்ளையன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X