இரண்டே நாளில் 3வது அணி: சுவாமி சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இன்னும் 2 நாட்களில் 3வது அணி அமைக்கப்பட்டு விடும் என ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பா.ஜ.க. உள்ளிட்டகட்சிகளை இணைத்து 3வது அணியை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.இந்த அணி இன்னும் ஓரிரு நாட்களில் உருவாக்கப்பட்டு விடும்.
3வது அணியில் தொகுதிப் பங்கீடு, யாருக்கு எந்தத் தொகுதி என்றபிரச்சினையெல்லாம் ஏற்படாது. (முதல்ல 234 தொகுதிகளுக்கும் ஆள் இருக்கா?)மிகவும் சுமூகமான முறையில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வோம்.
திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு சரியான மாற்று கூட்டணியாக இந்த 3வது அணிஅமையும் என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications