சேரனுக்கு வந்த வித்தியாசமான மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

ஆட்டோகிராப் படத்திற்காக கிடைத்த விருதை, தவமாய் தவமிருந்து படத்தில் சிறப்பாக நடித்த ராஜ்கிரணுக்குகொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று தொலைபேசி மூலம் இயக்குனர் சேரனுக்குகிறுக்குத்தனமான மிரட்டல் விடுத்த நபருக்கு போலீஸார் வலை விரித்துள்ளனர்.

சேரன் இயக்கி, நடித்த தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் தந்தையாக ராஜ்கிரண் நடித்திருந்தார்.நடித்திருந்தார் என்பதை விட தந்தை வேடத்தில் வாழ்ந்திருந்தார் ராஜ்கிரண்.

விக்ரமை விட மிகச் சிறந்த நடிகர் ராஜ்கிரண்தான் என்று சேரன் கூட அவரைப் புகழ்ந்தார்.

இந் நிலையில் சேரனுக்கு நூதனமான ஒரு மிரட்டல் வந்துள்ளது. அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டஒருவர்,

தவமாய் தவமிருந்து படத்தில் உங்களை விட ராஜ்கிரண் சிறப்பாக நிடித்துள்ளார். எனவே ஆட்டோகிராப்படத்திற்காக உங்களுக்குக் கிடைத்த விருதை ராஜ்கிரணுக்குக் கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால் நடப்பதேவேறு என்று கூறி விட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.

குழம்பிப் போன சேரன், எதற்கும் இருக்கட்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸார் சேரனுக்கு வந்த அழைப்பு எங்கிருந்து செய்யப்பட்டது என்று விசாரணை நடத்தினர். இதில்விருதுநகரில் உள்ள ஒரு பொதுத் தொலைபேசி மையத்திலிருந்து அந்த போன் செய்யப்பட்டது தெரிய வந்தது.

அந்த மர்ம நபரை போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+