பாமகவுடன் மோதவும் தயார்: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

பாமகவுடன் நேருக்கு நேர் போட்டியிடும் நிலை உருவானால், கூட்டணி தர்மத்தை மதித்து பாமகவை எதிர்த்துபோட்டியிட்டு வெல்வோம், விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல்உருவாகியுள்ளது. ராமதாசுடன் உள்ள நட்புறவால் பாமகவுக்கு எதிரான தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள்தவிர்த்துவிட்டு வேறு தொகுதிகளைக் கேட்டது.

அது தொடர்பான பட்டியலையும் அதிமுகவிடம் தந்துவிட்டு பத்திரிக்கைகளுக்கும் கொடுத்தார் திருமா. இதனால்கடுப்பான முதல்வர் ஜெயலலிதா, பாமக-விடுதலைச் சிறுத்தைகளை மோத வைக்கும் வகையில் தொகுதிகளைஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.

அதே போல மதிமுக விஷயத்திலும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கேட்ட தொகுதிகளைத் தரஅதிமுக தயாராக இல்லை. இதனால் சிக்கல் நீடித்துக் கொண்டுள்ளது.

இந் நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி நீதிமன்றத்தில் பஸ் எரிப்பு வழக்கில் ஆஜராவதற்காக வந்ததிருமாவளவன் லால்பேட்டையில் உள்ள அரசு பயணியர் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, எனக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது. வைகோவுக்கு குடும்ப அரசியல்தெரியாது, அவரது வாரிசுகள் யாரும் அரசியலில் இல்லை. அதை அவரும் அனுமதிக்கவில்லை, அவரதுகுடும்பத்தினரும் விரும்பவில்லை.

எனவே அதிமுக கூட்டணி மிகச் சிறந்த, மக்கள் நலம் விரும்பும் கூட்டணியாக அமைந்துள்ளது.

ஆனால் திமுகவில் அப்படி இல்லை. அங்கு நிலவும் வாரிசுப் பூசல் உலகம் அறிந்தது. குடும்ப அரசியல்தான்திமுகவின் லட்சிய அரசியல். மக்கள் நலம், தமிழர் நலம் குறித்து அதிமுக கூட்டணி அதிக அக்கறைசெலுத்துகிறது.

நாங்கள் வரும் தேர்தலில் 2 பொதுத் தொகுதிகள், 7 தனித் தொகுதிகளில் போட்டியிடுவோம். இதில் பாமகவுடன்மோதும் வகையில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் அதைத் தவிர்க்க மாட்டோம். கூட்டணி தர்மத்தைமதித்து, பாமக வேட்பாளர்களை வீழ்த்தி வெல்வோம், விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அதிமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இல்லை. சுமூகமாக இருக்கிறது. விரைவில்வைகோ எங்களது அலுவலகத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளார். மரியாதை நிமித்தமாகத்தான் வைகோவைஅவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்தேன் என்றார் திருமாவளவன்.

தனது கூட்டணியில் உள்ள வைகோவும்-திருமாவும் தனியே சந்தித்துப் பேசியதை கூட்டணிக்குள் ஒரு தனிகூட்டணியை உருவாக்க இருவரும் முயல்வதாகவே அதிமுக கருதுவதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+