For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியில் பங்கு-அதிமுகவுக்கு விஜயகாந்த் நிபந்தனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபைத் தேர்தலுக்குப் பின் ஆட்சியில் பங்கு தர முன் வரும் கட்சியுடன் மட்டுமேகூட்டணி வைப்போம் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர்விஜயகாந்த் புது நிபந்தனையை விதித்துள்ளார்.

விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகக் கட்சியை முதலில் ஒதுக்கிவைத்திருந்த அதிமுக இப்போது கூட்டணியில் சேர்க்க பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறது. மறுபுறம், பாஜகவும் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுத்து வருகிறது.

தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்றின் அதிபர் மூலமாகவும் விஜய்காந்தைஇழுக்க அதிமுக முயல்கிறது. கூட்டணிக்காக பல தரப்பில் இருந்தும் தனக்குஆளும்தரப்பு நெருக்குதல் தந்து வருவதால் கேப்டன் அவர்களுக்கு சிலதகவல்களைத் தெளிவாக சொல்லி அனுப்பியுள்ளார்.

அதாவது ஆட்சியில் பங்கு, எனக்கு முல்வர் பதவி. இதற்கு ஒப்புக் கொண்டால்தொடர்ந்து பேசலாம் என்று அதிரடியாக விஜயகாந்த் பதில் சொல்லி அனுப்பவேஅதிமுக மிரண்டு பின் வாங்கி விட்டது.

இருந்தாலும் விஜயகாந்த்தை எப்படிாவது சரிக்கட்டி வழிக்குக் கொண்டு வர அதுமுயன்று வருகிறது. அவரது மனைவி பிரேமலதாவும், மச்சான் சுதீசும் அதிமுகதரப்புடன் சசிகலா மூலமாகப் பேசி முடித்துவிட்டனர்.

ஆனால், விஜய்காந்தியின் கட்சியின் அதிமுக கூட்டணியை அறவே விரும்பவில்லை.இதனால் தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக முடிவெடுக்க முடியாமல் உள்ளார்விஜய்காந்த்.

இந் நிலையில் மதுரையில் 3 நாள் பிரசாரத்தை இன்று தொடங்கினார் விஜயகாந்த்.மதுரை அவனியாபுரத்தில் அவரது முதல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போதுதிரளாக கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசுகையில்,

தேசிய முற்போக்கு திராவிட கழகம் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது. தனித்தே போட்டியிட்டு வெல்வோம். அப்படியே கூட்டணி வைத்துக்கொள்ள யாராவது தொடர்ந்து விரும்பினால், ஆட்சியில் எங்களுக்குப் பங்கு தரவேண்டும். அப்போதுதான் கூட்டணி குறித்துப் பரிசீலப்போம் என்றார்.

ஆட்சியில் பங்கு தரத் தயாரா என்று விஜய்காந்த் கேட்டிருப்பது தன்னை நெருக்கும்அதிமுகவை நோக்கித் தான் என்பது தெளிவாகிறது. இதை ஏற்க அதிமுகவால்முடியாது என்பதால் தன்னை அக் கட்சி நிம்மதியாக இருக்க விடும் என விஜய்காந்த்கருதுகிறார்.

மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் தொடர்ந்து பிரசாரம் செய்கிறார் விஜயகாந்த். இதுஅவரது சொந்த மாவட்டம் என்பதால் விஜயகாந்த் போகும் இடங்களிலெல்லாம்கூட்டத்தைத் திரட்டி பலத்தைக் காட்ட கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துவருகின்றனர்.

இதற்கிடையே நேரத்தில் விஜயகாந்த் போடும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுகூட்டணி அமைக்க பாஜக தயாராகவே உள்ளது.

நீங்கள் 160 தொகுதிகளில் நில்லுங்கள், நாங்கள் 70 தொகுதிகளில்போட்டியிடுகிறோம். ஜெயித்தால் நீங்கள்தான் முதல்வர் என்று அறிவிக்கவும் நாங்கள்தயார் என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. (ஜெயிக்கப் போவதில்லை என்பதில்பாஜகவுக்கு அவ்வளவு நம்பிக்கை போலிருக்கிறது)

இதுதொடர்பாக சமீபத்தில் டெல்லிக்குச் சென்ற விஜய்காந்துடன் பாஜக உயர்மட்டத்தலைவர்களும் பேசியுள்ளனர். ஆனால், தனக்கு சிறுபான்மையினரின் ஆதரவும்இருப்பதாகக் கருதும் விஜய்காந்த் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து அதை இழக்கத்தயாராக இல்லையாம்.

அவரைப் பற்றி சகட்டுமேனிக்கு செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவைகுறித்து விஜயகாந்த்திடம் கேட்டபோது,

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டியிடுவோம். எனதுகட்சியைப் பொருத்தவரை நான் எடுக்கும் முடிவே இறுதியானது. வெளியிலிருந்துகூட்டணிக்காக பலர் என்னை அணுகியுள்ளனர். (தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைஅதிபர் ஒருவரும் ஒரு மாலை நாளிதழ் அதிபரும் விஜய்காந்துடன் அதிமுக சார்பில்பேசியுள்ளனர்)

ஆனால் நேரடியாக எந்தக் கட்சியின் தலைவரும் என்னை அணுகவில்லை. தமிழகவேட்பாளர்களுக்கான நேர்காணலை முடிக்கப் போகிறேன். இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டோம். நிறைய பெண்கள் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர்.

தனித்துப் போட்டியிட வேண்டும் என்றுதான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள்.நான் தெய்வத்தையும், அதற்கு அடுத்தபடியாக மக்களையும் நம்புபவன். தேர்தல்களத்தை அந்த நம்பிக்கையோடுதான் சந்திக்கிறேன் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X