கேரளாவுக்கு ஓசியில் நாமக்கல் கோழிகள்!
நாமக்கல்:
பறவைக் காய்ச்சல் பீதியைப் போக்கும் வகையில், கேரள மாநிலத்தில் நடத்தப்படும்திருமண நிகழ்ச்சிகளுக்கு நாமக்கல்லில் இருந்து இலவசமாக கோழிக்கறியைவினியோகிக்கும் திட்டத்தை கோழிப் பண்ணையாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
பறவைக் காய்ச்சல் பீதியால் நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து கோழி, முட்டை ஏற்றுமதிபெருமளவில் குறைந்துவிட்டது.கோழிக்கறி, முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டு விட்டாலும்கூட, விற்பனை இன்னும் நிமிராததால், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
அவர்களது முக்கியமான மார்க்கெட்டுகளிலி கேரள மாநிலமும் ஒன்று. நாமக்கல்மண்டலத்திலிருந்துதான் கேரளாவுக்கு அதிக அளவில் கோழிக்கறி, முட்டைகள்போகின்றன.
ஆனால் இப்போது கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக கோழிக்கறிவிற்பனை மந்தமாக உள்ளது.
இதையடுத்து கேரள மக்களின் மனதிலிருந்து பறவைக் காய்ச்சல் பீதியைக் குறைக்கும்வகையில் புதிய திட்டம் ஒன்றை நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள்ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, கேரளாவில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு கோழிக்கறியை,இலவசமாக அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி கூறுகையில்,இங்கிருந்து கேரளாவுக்குத்தான் அதிக அளவில் கோழிக்கறி அனுப்ப்படுகிறது.பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிக் கறியை அதிகம் சாப்பிடுவதை கேரள மக்கள்குறைத்து விட்டனர்.
அவர்களது பீதியைப் போக்கி மீண்டும் கோழிக் கறியை பிரபலப்படுத்தும்நோக்கில்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
இதற்காக முதல் கட்டமாக 70,000 கோழிகளை அனுப்பவுள்ளோம். கோழிக் கறிவியாபாரத்தை இது மீண்டும் மேம்படுத்த உதவும் என்றார் நல்லதம்பி.
கோடிக்கணக்கான முட்டைகளும் லட்சக்கணக்கான கோழிகளும் வாங்க ஆளின்றிநாமக்கல் பகுதியில் குவிந்து கிடப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications