அதிமுக-வி.சி இழுபறிக்கு நாளை முடிவு?
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 9 தொகுதிகள் குறித்துஅதிமுவுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும், திங்கள்கிழமை உடன்பாடுகையெழுத்தாகும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் என்பதில் இரு தரப்புக்கும் சிக்கல்ஏற்பட்டது.கேட்கும் தொகுதிகளைத் தர அதிமுக முன் வராததால் அக் கட்சியின் தேர்தல்குழுவினருடன் பேசுவதைத் தவிர்க்க சென்னையை விட்டே வெளியே போய்விட்டார்திருமா.
இரண்டு நாட்களாகக் கூப்பிட்டும் அவர் போகவில்லை. இதையடுத்து அதிமுக தரப்புஇறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து நேற்று மாலை மீண்டும் இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.
அதிமுக சார்பில் ஓ.பி, ஜெயக்குமார், மணியன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோரும்,சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சந்தித்துப் பேசினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
பேச்சு சுமூகமாக இருந்தது. எங்களது கருத்தைத் தெரிவித்தோம், அவர்களும் சிலகருத்துக்களைத் தெரிவித்தனர். மீண்டும் திங்கள்கிழமை இறுதியாகப் பேசுகிறோம்.
அதன் பின்னர் உடன்பாட்டில் கையெழுத்திடுகிறோம். திங்கள்கிழமையே உடன்பாடுஎட்டப்பட்டு விடும் என்றார் திருமா.
இன்னும் கூட சிறுத்தைகள் விரும்பும் தொகுதி கிடைக்கவில்லை என்பதுகிடைக்கவில்லை என்பதையே பேச்சுவார்த்தை திங்கள்கிழமை வரை நீடிப்பதைக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications