சிபி.ராதாவுக்கு விமான நிலையில் அடி, உதை
சென்னை:
தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில், மத்தியதொழிலக பாதுகாப்புப் படை வீரரால் தாக்கப்பட்டார்.
ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள், அந்தக் காவலரை சரமாரியாக தாக்கினார்கள்.இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பாஜக தலைவர ராஜ்நாத் சிங் சென்னைக்கு சனிக்கிழமை இரவு வந்தார். அவரைவரவேற்க மாநில பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன், சட்டசபை பாஜக தலைவர்கே.என்.லட்சுமணன் மற்றும் தொண்டர்கள் விமான நிலையம் சென்றனர்.
காமராஜர் உள்நாட்டு முனையத்தின் வழியாக அவர்கள் உள்ளே நுழைந்தனர்.அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த விஜயேந்திர சிங் என்ற மத்திய தொழிலகபாதுகாப்புப் படை வீரர் அனைவரையும் தடுத்து நிறுத்தி அனுமதியில்லாமல் இந்தவழியாக உள்ளே நுழைய முடியாது என்று கூறி தடுத்தார்.
ஆனால் அதையும் மீறி பாஜக தலைவர்கள் உள்ளே நுழைய முயற்சிக்கவே,கோபமடைந்த விஜயேந்திர சிங், சி.பி.ராதாகிருஷ்ணனின் சட்டையைப் பிடித்துபின்னுக்கு இழுத்தார்.
மேலும், ராதாகிருஷ்ணனைத் தாக்கிய அந்தக் காவலர் சரமாரியாக அடித்தார். இதனால்ஆத்திரமடைந்த கே.என்.லட்சுமணன் மற்றும் தொண்டர்கள், அந்த காவலரிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொண்டர்கள் விஜயேந்திர சிங்கை வளைத்துப் பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மத்திய தொழிலக பாதுகாப்புப் படைஅதிகாரிகள் மற்றும் மாநில பாலீஸார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும்விலக்கி விட்டனர்.
இந்த அடிதடி விவகாரத்தால் விமான நிலையத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்புநிலவியது.












Click it and Unblock the Notifications