காத்திருந்து..காத்திருந்து.. திண்டிவன சோகம்
சென்னை:
கருணாநிதியிடம் தருமாறு சோனியா காந்தி கொடுத்தனுப்பிய தொகுதிப் பட்டியலில் எந்தெந்த தொகுதிகள்உள்ளன என்ற விவரம் இங்குள்ள காங்கிரஸ் தலைவருக்கே தெரியாது என்று தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
தனது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியில் திண்டிவனம் பேசியதாவது:தமிழக காங்கிரஸ் கட்சி வட நாட்டுத் தலைவர்களின் பொம்மையாக உள்ளது. திமுகவுக்கு எடுபிடியாகவும்கொத்தடிமையாகவும் உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தொகுதிப் பட்டியலை கருணாநிதியிடம கொடுத்தார். அந்தப் படத்தைபத்திரிக்கைகளில் பார்த்தபோது சிரிப்புத் தான் வந்தது.
சீலிட்ட கவரில் தொகுதிப் பட்டியலை சோனியா கொடுத்து அனுப்பியதாகவும், அதை இங்குள்ள தலைவர்கள்கருணாநிதியிடம் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். தொகுதிகள் விவரம் இங்குள்ள காங்கிரஸ் தலைவருக்கேதெரியாது என்பது தான் உண்மை.
இதைவிடக் கேவலம் ஏதாவது இருக்க முடியுமா?
திமுகவுக்கு அடிமையாக இருக்க முடியாது என்பதால் தான் தனிக் கட்சி தொடங்கி அதிமுகவை ஆதரிக்கிறோம்என்றார் திண்டிவனம்.
இந் நிலையில் அதிமுகவில் திண்டிவனம் கட்சிக்கு ஒரே ஒரு இடம் தான் தருவோம் என்று கூறிவிட்டார்களாம்.காங்கிரஸை உடைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கூடவே சொற்ப தலைகளோடு கட்சியைவிட்டு வெளியேறினார் திண்டிவனம்.
வந்தவர் ஜோராக அதிமுக தேர்தல் குழுவிடம் போய் எங்களுக்கு இந்த 42 சீட் மட்டும் போதும் என்று கூட்டணிபேசப் போக, அந்தக் குழுவில் இருந்தவர்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, உங்களுக்கு 3 சீட்தான் என்றார்களாம்.
இதையடுத்து திண்டிவனம் முகத்தைக் கோபமாக்கிக் கொண்டு பேசிவிட்டுத் திரும்பினார்.
இந் நிலையில் அவருக்கு ஒரே ஒரு சீட் தான் என்ற முடிவுக்கு அதிமுக வந்துவிட்டதாக சொல்கிறார்கள். கூட்டணிதொடர்பாக பேசக் கூட திண்டிவனத்தை இதுவரை போயஸ் கார்டன் மீண்டும் அழைக்கக் கூட இல்லை.
தனது வலதுகரமான திருச்சி வேலுச்சாமியை விட்டு நடராஜன் மூலமாக முயன்றும் கூட அதிமுக தலைமைஇதுவரை திண்டிவனத்தைக் கண்டுகொள்ளவில்லையாம்.
இதனால் கையைப் பிசைந்து கொண்டுள்ளது திண்டிவனம் தரப்பு.












Click it and Unblock the Notifications