செக்ஸ் டார்ச்சர்- மந்திரி தளவாய் குற்றமற்றவர்
சென்னை:
அமைச்சர் தளவாய் சுந்தரம் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாககூறப்பட்ட புகாரில் உண்மையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தமருதமுத்து கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் டாக்டர் கோமதி.இவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீதுபுகார் கொடுத்தார்.அதில், எனக்கு அமைச்சர் தளவாய் சுந்தரம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.அதற்கு நான் உட்படாததால், டிரான்ஸ்பர் செய்து பழி வாங்குகிறார். அவர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், அந்தப் புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. புகரை வாங்கிவைத்துக் கொண்டு அடை காத்தனர்.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகினார் கோமதி. இதைத் தொடர்ந்துபோலீசாருக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், கோமதி கூறிய புகார்கள் குறித்துவிசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் விசாரணைக் கமிஷனைநியமித்தது.
இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி ரோஷன் லால் ஹாண்டா, வழக்கறிஞர்அருள்மொழி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் குழு விசாரணை நடத்தி தலைமைச் செயலாளரிடம் அறிக்கையைசமர்ப்பித்துள்ளது. அதில், அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது டாக்டர் கோமதி சுமத்தியகுற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை. வேண்டும் என்றே பழிசுமத்தும் வகையில்இந்தப் புகார்களை கோமதி சுமத்தியுள்ளார்.
டாக்டர் கோமதி மீது துறை சார்ந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications