திமுக ஒரு கு.ஆ.ம.வி.கூ!: காளிமுத்து
சென்னை:
திமுக தலைமையிலான குடும்ப ஆதிக்க மக்கள் விரோத கூட்டணியை அதிமுகதலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி வீழ்த்தப் போகிறது என்று அதிகஅவைத் தலைவர் காளிமுத்து ஆரூடம் கூறியுள்ளார்.
ாளிமுத்து இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக தேர்தல் குருஷேத்திரக் களத்தில் இரண்டு அணிகள் எதிர் எதிராக நிற்கின்றதுல்லியமான சித்திரம் அமைந்து விட்டது.
தருமபுத்திரன் தலைமையில் உள்ள பாண்டவர் படையைப் போல புரட்சித்தலைவியின் தலைமையில் உள்ள ஜனநாயக மக்கள் கூட்டணி, துரியோதனாதியர்தலைமையில் அமைந்துள்ள, கெளரவத்தை இழக்கப் போகும் கவுரவர் படையைப்போல திமுக தலைமையில் உள்ள குடும்ப ஆதிக்க மக்கள் விரோதக் கூட்டணி.
ஜனநாயக உணர்வும், மக்களின் அன்பையும் பெற்றுள்ள கூட்டணி, புரட்சித் தலைவிகூட்டணி என்பதால் பொருத்தமாக, அம்மா இதற்கு ஜனநாயக மக்கள் கூட்டணி என்றுபெயர் சூட்டி இருக்கிறார்.
திமுக கூட்டணியில் குடும்ப ஆதிக்கம் இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்தியபின்புலம் இருக்கிறது. எனவே குடும்ப ஆதிக்க மக்கள் விரோதக் கூட்டணி என்பதேபொருத்தமாக இருக்கும்.
தேங்காய் நார் ஒன்றாகச் சேர்ந்து கயிறாகும். கயிறுகள் ஒன்றாகச் சேர்ந்த வடமாகும்.ஆனால் அதிமுக மக்கள் அன்பைப் பெற்று ஏற்கனவே வடமாக இருக்கிறது. இந்தவடம் பலமான வடம், திருவாரூர் தேரையே இழுக்கும் சக்தி வாய்ந்த வடமாகும்.
ஏழைக்குக் கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி அவர்களின் கைத்தல நிறைகனியாக அம்மா ஆக்கித் தந்திருக்கிறார்.
திமுக கூட்டணியோ, ஒற்றைக் குடும்பத்தின் ஆதிக்க அரசியலுக்குள் சிறைப்பட்டுசீர்குலைந்து நிற்கிறது. கூட்டணி அமைப்பது, இடம் ஒதுக்குவது எல்லாமே குடும்பமேற்பார்வையில் நடக்கிறது.
திமுக தலைவர், ஸ்டாலின், தயாநிதி மாறன் -இதுதான் அவர்களின் மெய்யானகூட்டணி. மற்ற கூட்டணி என்பதெல்லாம் ஒப்புக்குச் சப்பாணி, ஊருக்குமாங்கொட்டை என்ற அளவில்தான்.
விரைவிலேயே அவர்கள் கூட்டணிக்குள்ளேயே போட்டா போட்டி, காட்டா குஸ்திநடப்பதைக் காணலாம். ஆனால் அம்மாவின் கூட்டணி லட்சியக் கூட்டணி.
தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிக்காரர்களின் வீட்டிலும், அவர்களது மனைவிவடிவிலோ, மகன் வடிவிலோ, அதிமுக வாக்குகள் இருக்கின்றன.
பல இரணியன்கள் வீடுகளிலே நம்முடைய பிரகலாதன்கள் இருக்கிறார்கள். ஆகவே,திமுக, காங்கிரஸ் இல்லங்களிலிலேயிருந்து அம்மாவுக்குக் கணிசமான வாக்குகள்காத்திருக்கின்றன என்று கூறியுள்ளார் காளிமுத்து.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications