காங்.க்கு சென்னையில் ஒரே ஒரு தொகுதிதான்!
சென்னை:
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 48 தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டுமேசென்னை நகர தொகுதியாகும். பூங்கா நகர் தொகுதியை பாமகவுக்குக் கொடுக்க திமுகமுடிவு செய்து விட்டதால் அந்தத் தொகுதியும் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை.
திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்து ஒப்பந்தமும்கையெழுத்தானது. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளில் பெரும்பாலானவைஅக்கட்சிக்குக் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.குறிப்பாக நீண்ட காலமாக போட்டியிட்டு வந்த பல தொகுதிகள் அக்கட்சிக்குக்கிடைக்கவில்லை. அவற்றில் சிலவற்றில் பாமக போட்டியிடவுள்ளது. சிலவற்றில்திமுகவே போட்டியிடவுள்ளதாம்.
சென்னை நகரில் காங்கிரஸுக்கு ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி (ஆர்.கே.நகர்)ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பூங்கா நகர் தொகுதி (பார்க் டவுன்)மறுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியில் தான் கடந்த தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட்டவிநாயகமூர்த்தி வெற்றி பெற்றார். மூத்த தலைவரான வர் தீவிர மூப்பனார்ஆதரவாளராக இருந்தவர். ஆனால், சமீபகாலமாக அதிமுகவுக்கு ஜால்ரா போட்டும்வாசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வந்தார்.
இதையடுத்து வாசனின் ஆதரவாளரான மனோ தலைமையிலான தொண்டர்கள்விநாயகமூர்த்தியை கட்சி அலுவலகத்திலேயே வைத்து நையப்புடைத்தனர்.
இந் நிலையில் இவருக்கு தொகுதியே இல்லாமல் செய்துள்ளது திமுக. அவரது பூங்காநகர் தொகுதியை பாமகவுக்கு கொடுக்க முடிவு செய்துவிட்டது திமுக. வாசனும் இந்தத்தொகுதியை எங்களுக்குத் தர வேண்டாம் என திமுக தலைவர் கருணாநிதியிடம்கூறிவிட்டதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் வழக்கமாகப் போட்டியிடும்தொகுதிகளை சிரமப்பட்டு திமுகவிடமிருந்து பெற்று விட்டது அக் கட்சி.
தொண்டாமுத்தூர் (எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்), ஸ்ரீபெரும்புதூர் (யசோதா), வேலூர்(ஞானசேகரன்), பூந்தமல்லி (பொருளாளர் சுதர்சனம்), வால்பாறை (கோவை தங்கம்)ஆகியவை அதில் சில முக்கியத் தொகுதிகளில்.
23,000 பேர் விண்ணப்பம்:
இந் நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் கேட்டு வரலாறு காணாத அளவுக்குவிண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. மொத்தம் 23,000 விண்ணப்பங்கள்வந்துள்ளதாம்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கான மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லிமொய்லி கூறுகையில், சில விண்ணப்பதாரர்களை நான் நேரிலும் அழைத்துநேர்காணல் நடத்தியுள்ளேன். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்ட பின்னர்வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படும் வேட்பாளர் பட்டியல் கட்சி மேலிடத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.
அதையடுத்து பல்வேறு விவாதங்கள், ஆய்வுகள், ஆக்ரோஷங்கள், கோஷ்டிமோதல்கள், குழப்பங்களுக்குப் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியலை டெல்லிவெளியிடும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications