ஏப்ரல் முதல் பிரசாரம்: கருணாநிதி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுமுடிவடைந்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியீட்டிற்காகதயாராக உள்ளது.

பாமகவுக்கான தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ முழுமைபெற்று விடும்.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு, நேர்காணல் நடத்த ஒருகுழு, தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழு, பிரசார உத்திகளை வகுக்க ஒரு குழு எனஅமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் அடிக்கடி கூடி தங்களது பணிகளை சிறப்பாகசெய்து வருகின்றன.

அந்தப் பணிகள் எல்லாமே இந்த வார இறுதிக்குள் முடிந்து விடும்.

எனவே ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து எனது பிரசாரப் பயணம் தொடங்கும் என்றுகருணாநிதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+