தியாகம் செய்த திமுக கூட்டணிக் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தொகுதிப் பங்கீட்டில் திமுகவை விட கூட்டணிக் கட்சிகள் தான் அதிக அளவில்விட்டுக் கொடுத்து, தியாகம் செய்து தொகுதிகளை மாற்றிக் கொண்டுள்ளன.

தொகுதிப் பங்கீட்டில் திமுகவை விட கூட்டணிக் கட்சிகள் தான் அதிக அளவில்விட்டுக் கொடுத்து, தியாகம் செய்து தொகுதிகளை மாற்றிக் கொண்டுள்ளன.

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த பட்டியல்வெளியாகியுள்ளது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்பார்க்கப்பட்டது போலவேதொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாமக ஒரு வட மாவட்டக் கட்சி தான் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 31 தொகுதிகளில், 20 தொகுதிகள் வடமாவட்டங்களைச் சேர்ந்தவை.

மறற தொகுதிகள் மேற்கு மாவட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

தெற்கு, கிழக்கு தமிழகத்திலிருந்து ஒரு தொகுதி கூட பாமகவுக்குஒதுக்கப்படவில்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளைகோரியிருந்தது பாமக. ஆனால் ஒரு தொகுதி கூட தரப்படவில்லை.

இதேபோல, மதுரை நகரில் உள்ள 3 தொகுதிகளில் ஒரு தொகுதியில் (மதுரை மத்தி)மட்டுமே திமுக போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கொடுத்து விட்டது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற பூங்காநகர், திருவள்ளூர், கோவை கிழக்கு, கரூர்,குன்னூர், மதுரை மத்தி, கடலாடி, சிவகாசி, கம்பம் ஆகிய தொகுதிகள் திமுகவுக்குப்போய்விட்டன.

பாமக வென்ற அச்சரப்பாக்கம், நாட்ராம்பள்ளி, வந்தவாசி, சங்கராபுரம், சேலம்-2,அந்தியூர், தாராபுரம், ஆண்டிமடம், தர்மபுரி, ஆகிய தொகுதிகளையும் திமுக எடுத்துக்கொண்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்ற பொன்னேரியும் திமுகவுக்குப் போயுள்ளது.

பாமக வசம் உள்ள பூந்தமல்லி, செய்யாறு ஆகியவை காங்கிரஸுக்குஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வசம் உள்ள அரூர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல காங்கிரஸ் வென்ற வாசுதேவநல்லூர் மார்க்சிஸ்ட் கட்சிக்குஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், பாமக ஆகிய இரு கட்சிகளும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள்பலவற்றை இம்முறை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் காங்கிரஸ்தான் அதிகமாக தியாகம் செய்துள்ளது.

வெறும் 129 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால் கிட்டத்தட்ட 95 சதவீதஇடங்களில் வென்றால் தான் ஆட்சியமைக்கத் தேவையான 117 இடங்களைதிமுகாவால் பெற முடியும். இதனால், கூட்டணிக் கட்சிகளின் பலம் வாய்ந்ததொகுதிகளை திமுக எடுத்துக் கொண்டுள்ளது.

தோற்ற தொகுதிகளை கைகழுவிய திமுக:

அதே போல கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த சட்டசபை இடைத் தேர்தல்களில்போட்டியிட்டு தோல்வியடைந்த ஐந்து தொகுதிகளையும் திமுக இம்முறை கூட்டணிக்கட்சிகளுக்கு தள்ளி விட்டு விட்டது.

கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 167 தொகுதிகளில் திமுகபோட்டியிட்டது. ஆனால் இம்முறை 129 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு ரிஸ்க்எடுக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த இடைத் தேர்தல்களில் தோல்வியடைந்தசைதாப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம், வாணியம்பாடி, சாத்தான்குளம்ஆகியவற்றில் இம்முறை திமுக போட்டியிடவில்லை. மாறாக கூட்டணிக்கட்சிகளுக்கு அவற்றை தள்ளி விட்டு விட்டது. இதில் சாத்தான்குளம்காங்கிரஸுக்கும், மற்ற தொகுதிகள் பாமகவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

திமுகவை விட அதிமுக இம்முறை 53 தொகுதிகளில் கூடுதலாக போட்டியிடுகிறது.

கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு:

இந் நிலையில் வழக்கமாக காங்கிரஸ் போட்டியிடும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியை திமுககு ஒதுக்கிக் கொண்டதைக் கணடித்து சில காங்கிரஸ்தொண்டர்கள் திசையன்விளையில் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர். இந்தத் தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் அப்பாவு திமுகவில்இணைந்துவிட்டார். இதனால் இத் தொகுதியில் திமுக சார்பில் அவரே போட்டியிடுவார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+