107 தொகுதிகளில் அதிமுக-திமுக நேரடி மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகவும் திமுகவும் 107 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்அறிவிக்கப்பட்டு விட்டன. திமுக ற்ேறு இரவு வெளியிட்டது. இன்று காலை அதிமுகதனது பட்டியலை வெளியிட்டது.

சென்னையில் 7 தொகுதிகளில் திமுகவும், அதிமகவும் நேரடியாக களத்தில்சந்திக்கின்றன. தமிழகம் முழுவதும் 107 தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடிமோதலில் இறங்குகின்றன.

அதிமுக மொத்தம் 33 ரிசர்வ் தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக 24 தனித்தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.தொடர்பான செய்திகள் அக்கட்சி அதிகபட்சமாக 160 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.

முதல் முறையாக தற்போது 182 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில்140 தொகுதிகளில் போட்டியிட்டு 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 9 தொகுதிகளில் 7தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.

மதிமுகவுக்கு 3 தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலில் மதிமுகவுக்கு10க்கும் மேற்பட்ட தனித் தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கியதால் பிரச்சனைஉருவாகி இடப் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது.

பாமகவும், மதிமுகவும் 3 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. பாமகவும்,விடுதலைச் சிறுத்தைகளும், முகையூர் தொகுதியில் மட்டுமே நேருக்கு நேர்மோதுகின்றன.

பாமகவுடன் அதிகம் மோதும் வகையில் திருமாவளவனுக்கு தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. இதனால்திருமாவளவனுக்கும் அதிமுகவுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது. தொகுதிப் பங்கீடு உடன்பாடும் இழுத்துக்கொண்டே போனது.

ஆனால், திமுக விறுவிறுவென தொகுதி ஒதுக்கீட்டை முடித்து பட்டியலைவெளியிட்டுவிட்டதால் வேறு வழியின்றி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்விஷயத்தில் இறங்கி வந்து, அவர்கள் கேட்டபடி தொகுதிகளை இறுதி செய்துள்ளதுஅதிமுக.

ஆனாலும் இந்தத் தொகுதிகள் ஒதுக்கீட்டில் மதிமுக மகிழ்ச்சியாக இல்லை என்றேதெரிகிறது. அவர்கள் கேட்ட பெரும்பாலான தொகுதிகள் கிடைக்கவில்லை. ஆனால்,திருமாவளவன் தான் நினைத்தபடி தொகுதிகளை வாங்கிக் கொண்டுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+