நிகர்நிலை பல்கலை மாணவர் போராட்டம்-உயர் நீதிமன்றம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிகர்நிலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்வி மாணவர்கள் தங்களதுபோராட்டங்களைக் கைவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கைவிடுத்துள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் நடத்தப்படும் பொறியியல்படிப்புகளுக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழிற்நுட்பக் கல்விக் கவுன்சில்ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இது வன்முறையாக மாறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய தொழிற் கல்வி கவுன்சிலின் முடிவை எதிர்த்து நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களும், மாணவர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதி ஷா கூறுகையில், இந்த வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிசாரிக்கவுள்ளோம். எனவே மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடவேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான அனைத்துக் கோப்புகளையும்பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழிற் கல்விக் கவுன்சில்ஆகியவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு நீதிபதிகள்ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+