சிபிஐ வசம் ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துமதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Meenakshi
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மாணிக்கம்பட்டி என்ற ஊரில் உள்ளபள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் மீனாட்சி. கடந்த 2004ம் ஆண்டுஇறுதியில் இவர் காணாமல் போனார்.

இதுதொடர்பாக குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீஸார் உரியநடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், இந்த விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏ பாப்பாசுந்தரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது தான்.

இதையடுத்து மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, போலீசாருக்கு டோஸ் விட்டுவழக்கை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைத்தது.

இந்த வழக்கில் குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன்,உறவினர் உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகள் சிக்கினர். ஆனால் அவர்களிடம்போலீஸார் சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை.

அவர்களைக் காப்பாறுவதிலேயே கவனம் செலுத்தியதாக ஜோதி ராமலிங்கம் குற்றம்சாட்டினார். மதுரை உயர்நீதிமன்றக் கிளையும், சம்பந்தப்பட்ட அனைவரிடமும்முறையாக விசாரணை நடத்த காவல்துறைக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் பாப்பா சுந்தரம், அவரது உறவினர், மகன், ஜோதி ராமலிங்கம்உள்ளிட்டோரிடம் லை டிடெக்டர் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் இதில்உருப்படியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந் நிலையில் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்துக்கொண்டே சென்றனர்.

இன்றும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேலும் 2 மாதகால அவகாசம் கேட்டு சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் இந்த மனுவை நிராகரித்த டிவிஷன் பெஞ்ச், இன்னும் ஒரு வாரத்தில்இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக காவல்துறைக்கு அதிரடி உத்தரவுபிறப்பித்தது.

இதன் மூலம் தமிழகத்தின் சர்ச்சைக்குரிய வழக்கான மீனாட்சி வழக்கு சிபிஐ வசம்போகிறது. கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் போலீசார் சரியாகவிசாரிக்காத பல முக்கிய வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+