திருநள்ளாறு சனீ பகவான் ஆலய கும்பாபிஷேகம்
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில்இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.
இக்கோவிலில் ரூ. 90 லட்சம் செலவில் 7 நிலைகளுடன் கூடிய புதிய ராஜகோபுரம்கட்டப்பட்டுள்ளது. அதன் மீது 9 தங்கக் கலசங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், விநாயகர், சுப்பிரமணியர், சனி பகவான்,தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை மறறும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்குமகா கும்பாபிஷேகம் நடந்தது.
லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு சனி பகவானை வணங்கினர்.பக்தர்கள மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் புதுவை மாநில துணை நிலை ஆளுனர் லகேரா, துணைசபாநாயகர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏக்கள், ஆட்சித் தலைவர் சுதிர்குமார், தருமபுரஆதினம் சண்முகதேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,
திருப்பனந்தாள் மடாதிபதி, கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 5 மணியளவில் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், இரவில் பஞ்சமூர்த்திவீதி உலாவும் நடைபெறுகிறது. நாளை முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம்நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications