சோனியா நாடகமாடுகிறார்: ஜெ சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.பி. பதவியிலிருந்தும், தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியிலிருந்தும்விலகியதன் மூலம் சோனியா காந்தி மிகப் பெரிய அரசியல் நாடகத்தை நடத்திக்காட்டியுள்ளார் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதாயம் தேடித் தரும் பதவியில் வகித்து வருவதுஇனியும் முடியாது, ராஜினாமா செய்வது தவிர்க்க முடியாதது என்பது தெரிவந்தபின்னரே வேறு வழியின்றி தனது எம்.பி மற்றும் தேசிய ஆலோசனைக் குழுத்தலைவர் பதவிகளை சோனியா காந்தி ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு எந்தப் பொறுப்பும் இல்லாத நிலையில், அரசைக்கட்டுப்படுத்தும் வகையில் தேசிய ஆலோசனைக் குழுத் தலைவராக பொறுப்பேற்றார்சோனியா காந்தி.

அப்போது அனைவரையும் திசை திருப்பும் வகையில், மிகப் பெரிய தியாகத்தைஅவர் செய்தது போல சித்தரிக்கப்பட்டார்.

பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதையும்,அதற்கு எதிர்ப்பு வலுத்தபோது, பிரதமர் பதவி வேண்டாம் என்று அறிவித்து நாடகம்ஒன்றை அரங்கேற்றினார்.

இதன் மூலம் அவர் பெரிய தியாகி போல சித்தரிக்கப்பட்டார். இப்போதும்அதேபோன்ற அரசியல் நாடகம் ஒன்றை சோனியா காந்தி நடத்திக் காட்டியுள்ளார்.ஆனால் இதனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+