தமிழில் குடமுழுக்கு-சிவனடியார்கள் கைது
கரூர்:
கரூரில் உள்ள புகழ் பெற்ற பசுபதீஸ்வரர் கோவிலில் தமிழ் முறைப்படி குடமுக்குநடத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்த 10 சிவனடியார்களை போலீஸார் கைதுசெய்தனர்.
கரூரில் உள்ள புகழ் பெற்ற பசுபதீஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் 3ம் தேதிசமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. ஆனால் தமிழ் முறைப்படிதான்குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று சிவனடியார்கள் கூட்டமைப்பு கோரி வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டும் இதுவரை அதிகாரிகள் எந்த முடிவையும் அறிவிக்காமல் மெளனம்சாதித்து வருகின்றனர்.
இதை கண்டித்து 10 சிவனடியார்கள் இன்று பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில்உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பசுபதீஸ்வரர் சன்னதி முன்பு உண்ணாவிரதம் இருந்த சிவனடியார்கள் தேவாரம்மற்றும் திருவாசகத்தை படித்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அங்கிருந்துஅப்புறப்படுத்தினர்.
ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறாத வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்போவதாக சிவனடியார்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழில் குடமுழுக்கு கோரினால் கைது செய்யும் நிலைமை நிலவுவது கேலலமானது மட்டுமல்ல..மிகவும் மன வருத்தமானதும் கூட.












Click it and Unblock the Notifications