பாமக சார்பில் வீரப்பன் மனைவி போட்டி?

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, பாமக சார்பில் பெண்ணாகரம் தொகுதியில்நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அதை தட்டமாட்டேன் என்று முத்துலட்சுமியும் கூறியுள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி வீரப்பன்மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். வீரப்பன்வேட்டையின்போது அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களைஒன்று திரட்டி வந்தார்.

வீரப்பன் உயிருடன் இருந்தபோதே அவனை பாமகவில் சேர்க்க அக்கட்சி தீவிரமாகமுயன்றது. வீரப்பனும் வன்னியர் என்பதால், ஜாதி அடிப்படையில் வீரப்பனைகட்சியில் சேர்க்க பாமக தலைமை முயன்றது.

இதற்காக சரணடைய வருமாறும் வீரப்பனுக்கு தூது விடப்பட்டது. ஆனால் முதலில்இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் பின்னர் மனம் மாறி விட்டான்.

இந் நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை பாமகவில் சேர்க்க முயற்சிகள்நடக்கின்றன. சமீபத்தில் திண்டிவனத்தில் நடந்த பாமக மாநாட்டில் முத்துலட்சுமியும்கலந்து கொண்டார்.

அவரை பெண்ணாகரம் அல்லது மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் பாமக சார்பில்நிறுத்தவும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.

இந் நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணியை சமீபத்தில் முத்துலட்சுமி சந்தித்துப்பேசியுள்ளார்.

இதுகுறித்து முத்துலட்சுமி கூறுகையில், நான் கொளத்தூரில் ஜி.கே.மணியை சந்தித்ததுஉண்மைதான். ஆனால் தேர்தலில் நிற்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. எனதுகுழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யுமாறுதான் மணியிடம் கோரிக்கை வைத்தேன்.

அவரும் செய்வதாக கூறினார். ஆனால் இப்போது தேர்தலில் தீவிர கவனம் செலுத்திவருவதால் அதுகுறித்து அவர் நினைக்க நேரமிருக்காது என நினைக்கிறேன்.

நான் தேர்தலில் நிற்க பாமகவிடம் சீட் கேட்கவில்லை. அவர்களும் என்னைஅணுகவில்லை. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை முடிவுஎடுக்கவில்லை.

யோசித்து வருகிறேன். ஆனால் என்னை சந்திக்கும் பொதுமக்கள் தேர்தலில் நிற்கவற்புறுத்துகிறார்கள்.

பாமக சார்பில் பெண்ணாகரம் அல்லது மேட்டூரில் நிற்கும் வாய்ப்பு வந்தால்அதுகுறித்து அறிவிப்பேன் என்றார் முத்துலட்சுமி.

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதல்கள்,விசாரணை என்ற பெயரில் நடந்த கொடுமைகளால் பாதிப்படைந்த மக்கள்முத்துலட்சுமியை தேர்தலில் நிற்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களது ஓட்டுக்களை அப்படியே அள்ளி எடுக்கும் முயற்சியாக முத்துலட்சுமியைபாமகவிற்குள் இழுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+