காங். வன்முறை: ராயபுரம் மனோ மீது வழக்கு- 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த பெரும் வன்றைச்சம்பவம் தொடர்பாக, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோஉள்ளிட்டோர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை தியாகராய நிகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்காததால், அத்தொகுதியில் போட்டியிட ஆவலாகக் காத்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர்செல்லக்குமார் திமுகவிடமிருந்து கட்சி உரிய தொகுதிகளை பெறவில்லை என்றுகுற்றம் சாட்டியிருந்தார்.

அவரது ஆதரவாளர்கள் வீரப்ப மொய்லியின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம்நடத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து செல்லக்குமார் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதற்கு நியாயம்கேட்பதற்காக செல்லக்குமரின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றனர்.

ஆனால் அவர்களை உள்ளே நுழைய விடாமல் ராயபுரம் மனோவும் அவரதுகும்பலும் தடுத்து நிறுத்தியது. பின்னர் செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் மீது ராயபுரம்மனோவின் ஆட்கள் கொலை வெறித் தாக்குதலில் இறங்கினர்.

சத்தியமூர்த்தி பவன் முன்பு உள்ள காலி மைதானத்தில் விரட்டி விரட்டிஅடிக்கப்பட்டனர். இதில் அருள்பெத்தையா, குமார் உள்ளிட்ட 6 செல்லக்குமார்ஆதரவாளர்கள் படுகாயமடைந்தனர்.

ரத்தம் வழிய வழிய இவர்களை மனோ கும்பல் அடித்து நொறுக்கியது.

இந்த கொலை வெறித் தாக்குதல் குறித்து அருள்பெத்தையா திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் ராயபுரம் மனோ, ராயபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், ரூபன் உள்ளிட்டோர்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ராஜேஷ், ரூபன் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மற்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே, தனதுஆதரவாளர்களைத் தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஆதரவாளர்களைத் திரட்டி சத்தியமூர்த்தி பவன் முன்புஉண்ணாவிரதம் இருக்கப் போவதாக செல்லக்குமார் அறிவித்துள்ளார். (மறுபடியும்அடி வாங்க ஆசை போலும்)

அவர் கூறுகையில், திமுகவுடன் காங்கிரஸ் மேற்கொண்ட தொகுதிப் பங்கீட்டைமறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உரிய தொகுதிகளைப் பெறாதது ஏன் என்று கேள்வி கேட்ட என்னை கட்சியிலிருந்துநீக்கியுள்ளனர்.

எனது ஆதரவாளர்களை ரவுடிகளை வைத்து அடித்துள்ளனர். குண்டர்களும்,ரவுடிகளும்தான் காங்கிரஸ் கட்சியை நிர்வகித்து வருகிறார்கள் என்பது இதன் மூலம்நிரூபணமாகியுள்ளது.

கட்சியின் புகழைக் கெடுக்கும் வகையில் நாங்கள் எதுவும பேசவில்லை,செய்யவில்லை. கட்சியின் பெயரைக் காப்பாற்றும் முயற்சியில்தான் நாங்கள்ஈடுபட்டோம் என்றார் செல்லக்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+