மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சுற்றி வளைத்துஇலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் அத்தனை மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி ராமேஸ்வரம் வந்துசேர்ந்தனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 40க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச்சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரெனஇலங்கை கடற்படை வீரர்கள் அங்கு வந்தனர்.

தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து அவர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் மீனவர்கள்காயமின்றி உயிர் தப்பினர்.

இருப்பினும் விடாத கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள்,அவர்களின் வலைகள் உள்ளிட்டவற்றை கடலில் தூக்கிப் போட்டனர்.

கிட்டத்தட்ட 30 படகுகளின் வலைகள், மீன்கள் நாசம் செய்யப்பட்டன.

இலங்கை படையிடமிருந்து தப்பிய மீனவர்கள் பத்திரமாக ராமேஸ்வரம் வந்துசேர்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+