தெருத் தெருவாக கலக்கும் எம்.ஜி.ஆர்கள்
ராமேஸ்வரம்:
அதிமுகவுக்கு ஆதரவு கோரி எம்.ஜி.ஆர் வேடம் அணிந்த நூற்றுக்கணக்கானகலைஞர்கள் தமிழகம் முழுவதும் தெரு முனைகளை கலக்கி வருகின்றனர்.
இந்த பிரசாரத்திற்கு அழகு சேர்க்கும் வகையில், பல்வேறு கூத்துக் கலைஞர்களின்தெருமுனைப் பிரசாரம் பட்டையைக் கிளப்பும்.
குறிப்பாக எம்.ஜி.ஆர். வேடம் அணிந்த கலைஞர்களின் ஆதிக்கம்தான் ஒவ்வொருதேர்தலிலும் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் வருகிற சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக பிரசாரங்களிலும்எம்.ஜி.ஆர். தான் அதிகமாக காணப்படுகிறார்.
எம்.ஜி.ஆர். போன்ற வேடம் அணிந்த ஏராளமான கலைஞர்கள் அதிமுக பிரசாரக்கூட்ட மேடைகள்தோறும் ஆடிப் பாடி அதிமுகவினரையும், பொதுமக்களையும்கவர்ந்து வருகின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 5 எம்.ஜி.ஆராவது இருப்பதாக தெரிகிறது.அப்படிப்பார்த்தால் 200க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர்கள் தமிழகம் முழுவதும் கலக்கிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications