தைலாபுரத்தில் பாமக வேட்பாளர் தேர்வு தீவிரம்
சென்னை:
பாமக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸ் தீவிரமாக உள்ளார்.
இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில்ராமதாஸ் தீவிரமாக இறங்கியுள்ளார்.
பாமகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே 26 தொகுதிகளில் நேரடிப் போட்டிநிலவுகிறது. எனவே அதிமுகவை சமாளிக்கும் வகையிலான வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் ராமதாஸ் தீவிர கவனம் செலுத்துகிறார்.
இன்று காலை திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் தனது வீட்டில் 31 தொகுதி கட்சிநிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனையில் வேலூர், கடலூர், நாகை, தஞ்சை, விழுப்புரம்,திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்கலந்துகொண்டனர்.
தொகுதி நிலவரம், யாரை வேட்பாளராகப் அறிவிக்கலாம் என்பது உள்ளிட்டவைகுறித்து நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை செய்து வருகிறார்.
நாளையும் ஆலோசனை நடக்கிறது. ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications