கொலை: ஜெயேந்திரர் மீது குற்றச்சாட்டு பதிவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கில், பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் உள்ளிட்ட24 பேர் மீது குற்றச்சாட்டு இன்று பதிவு செய்யப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டது.அதன் பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுவை நீதிமன்றத்திறகு இவ்வழக்குமாற்றப்பட்டது.
புதுவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் நிலவி வருகிறது.இந் நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு,சுந்தரசே அய்யர், ரகு உளளிட்ட 24 பேர் மீதும் இன்று குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டன.
குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதையொட்டி 24 பேரும் நீதிமன்றத்தில் நேரில்ஆஜராகியிருந்தனர். பின்னர் வழக்கு விசாரணை ஏப்ரல் 17ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications