அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிகாரி
சென்னை:
கிராமப் புறங்களில் உள்ள சுவர்களில், வீட்டு உரிமையாளர்களின் அனுமதியோடுசுவர் விளம்பரங்கள் செய்ய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதிஅளித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன், ஆணையர்கள் கோபாலசுவாமி, நவீன்சாவ்லா ஆகியோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியே சந்தித்துதேர்தல் தொடர்பாக அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
இந்த சந்திப்பின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு யோசனைகளை,கோரிக்கைகளை தேர்தல் ஆணையர்களிடம் தெரிவித்தனர்.
அதில் காங்கிரஸ் சார்பில் முக்கியமான கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இடமாற்றம் தொடர்பாகதலைமைச் செயலாளர் உத்தரவின் பேரில் உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னாசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
![]() |
| ஜெ. வீட்டு வாசலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் அதிகாரி சரவணன் |
அரசுக்குச் சாதகமாக இருவரும் நடந்து கொண்டுள்ளனர். எனவே இவர்கள்இருவரையும் மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது.
அதே போல அதிமுக வேட்பாளர் பட்டியலை தலைமைச் செயலகத்தில் உள்ள மக்கள்தொடர்புத்துறை அதிகாரியான சரவணன் தான் கடந்த 27ம் தேதி போயஸ் கார்டன்வாசலில் வைத்து வெளியிட்டார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார்கள் குறித்து விசாரிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
இக் கூட்டத்தில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர்கள், கிராமப் புறங்களில் உள்ள சுவர்களில்விளம்பரம் செய்ய தடை இல்லை என்று தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட வீடு, கட்டடங்களின் உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வமானஅனுமதியைப் பெற்ற பின்னர் விளம்பரம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள்அறிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications