வேதாத்ரி மகரிஷி உடல் நாளை தகனம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் மரணமடைந்த ஆன்மீகத் தலைவர் வேதாத்ரி மகரிஷியின் உடல்வியாழக்கிழமை தகனம் செய்யப்படுகிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில், அறிவுத் திருக்கோவில் என்ற ஆன்மீகஅமைப்பை நிறுவி ஆன்மீக போதனைகளை நிகழ்த்தி வந்தவர் வேதாத்ரி மகரிஷி.

95 வயதான மகரிஷிக்கு, 3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து கோவையில உள்ள கே.ஜி. மருத்துவமனையில் அவர் சிகிச்சைபெற்றார்.

இந்த நிலையில மீண்டும் அவருக்கு பத்து நாட்களுக்கு முன்பு மலச்சிக்கல் ஏற்பட்டுஉடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மறுபடியும் அவர் கே.ஜி.மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

அங்கு குடல் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சைசெய்யப்பட்டது. இந்த நிலையில் திடீரென அவருக்கு சிறுநீரகம் செயலிழந்தது.இதனால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மகரிஷி மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து மகரிஷியின் உடல் ஆழியாறு அறிவுத் திருக்கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்துறை பிரகர்களும் மகரிஷியின்உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வியாழக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் அறிவுத் திருக்கோவில் வளாகத்தில்மகரிஷியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+