பெரியாறு விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு?

Subscribe to Oneindia Tamil

மதுரை :

பெரியாறு-வைகை பாசனப் பகுதி விவசாயிகள் வியாழக்கிழமை மதுரையில் கூடிமுக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டவிவசாயிகளும் பெரியாறு தண்ணீரை நம்பியே பாசனம் செய்து வருகின்றனர்.இம்மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் பெரியாறு அணையின்உயரத்தை உயர்த்துமாறு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், சட்டசபையை அவசரமாக கூட்டிஅவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது கேரள அரசு. இதை எதிர்த்து பெரியாறுபாசனப் பகுதி விவசாயிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசியல் கட்சிகள் ஒற்றுமையாகதிரண்டு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தஅரசியல் கட்சிகள் வாய் திறக்காமல் மெளனம் சாதிக்கின்றன.

விவசாயிகளை சமாதானப்படுத்துவதற்காக உப்பு சப்பில்லாத அறிக்கைகளையும்,பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் பெரியாறு-வைகை பாசனப் பகுதி விவசாயிகள் நாளை(வியாழக்கிழமை) மதுரையில் கூடுகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக அடுத்து என்ன செய்வது, எப்படிப்பட்ட போராட்டத்தைநடத்துவது, இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆதரவை எப்படிப் பெறுவதுஎன்பது உளளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கவும் அவர்கள் யோசித்து வருவதாகவும்கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளும் இக்கூட்டம்குறித்து தீவிர கவனம் செலுத்துகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+