தெலுங்கு புத்தாண்டு: ஜெ. வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உகாதியையொட்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோருக்கு முதல்வர்ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உகாதி எனப்படும் தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு நாளைகொண்டாடப்படுகிறது.இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பேசும்மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழகத்தில்பல நூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்பவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட மக்கள்.
பாரம்பரியத்தைப் பேணுகிற அதே வேளையில், தமிழ் மக்களோடு மக்களாய்த்தமிழகத்தில் வாழ்ந்து வரும் தெலுங்கு மக்களுக்கும், கன்னட மக்களுக்கும்புத்தாண்டுத் திருநாளாம் இந்த உகாதித் திருநாளில் என் இனிய வாழ்த்துக்கள் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications