இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: 8 மீனவர்கள் கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 4 படகுகள் கடலில்மூழ்கின. அதிலிருந்த 8 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை, நாகை மாவட்ட மீனவர்கள்மீது அடிக்கடி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த வெறித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான மீனவர்கள்பலியாகியுள்ளனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 450 படகுகளில்மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். மன்னார் வளைகுடாப் பகுதியில்அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை கடற்படையினர்அங்கு வந்தனர்.

தமிழக மீனவர்கள் மீது கை எறி வெடிகுண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.இதனால் நிலை குலைந்த தமிழக மீனவர்கள் அங்கிருந்து படகுகளில் தப்பினர்.

ஆனால், குண்டுவீச்சில் 4 படகுகள் கடலில் மூழ்கின. அதில் இருந்த 8 மீனவர்களும்கடலில் மூழ்கினர். அவர்கள் என்ன ஆனார்கள், இலங்கை படையினரால் மீட்டுஇலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை.

இந்த வெறிச் செயலால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

வழக்கம் போல மத்திய அரசு இந்த விஷயத்திலும் தொடர்ந்து மெளனமாகவேஇருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+