பாப்பாவுக்கு எதிராக "முளைத்த போஸ்டர்கள்

Subscribe to Oneindia Tamil

குளித்தலை:

ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் சிக்கிய குளித்தலை அதிக எம்.எல்.ஏ.பாப்பா சுந்தரத்திற்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டதை எதிர்த்து குளித்தலை முழுவதும்ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புகாணாமல் போனார். அவர் என்ன ஆனார், எங்கே இருக்கிறார் என்பது குறித்துதெரியவில்லை.

இந்த வழக்கில் குளித்தலை அதிமுக எம்எல்ஏ பாப்பா சுந்தரம், அவரது மகன்,உறவினர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை திருப்தி அளிக்காததால்,இவ்வழக்கை சமீபத்தில் சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டது.

இந்த நிலையில் குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் பாப்பாசுந்தரத்திற்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இது குளித்தலையில் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் குளித்தலை முழுவதும் இன்று பாப்பா சுந்தரத்திற்கு எதிராகசுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாப்பாசுந்தரத்திற்கு எம்.எல்.ஏ சீட் ஒரு கேடா? என்று கட்டு ஒட்டப்பட்டுள்ள இந்தசுவரொட்டி பொதுமக்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இந்த சுவரொட்டிகளால் குளித்தலை மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+