அதிமுக வேட்பாளர் பட்டியலில் மீண்டும் மாற்றம்:வில்லன் ஆனந்தராஜ் உள்ளே-சிவகாமி வெளியே
சென்னை:
அதிமுக வேட்பாளர் பட்டியலில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 4வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
நடிகர் ஆனந்தராஜ் புதுவை உருளையன்பேட்டை தொகுதியின் வேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ளார்.அதிமுகவினரால் கெரோ செய்யப்பட்ட தாராபுரம் வேட்பாளர் சிவகாமி வின்சென்ட்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
182 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் 27ம் தேதிவெளியிடப்பட்டன. அடுத்த நாளே வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது.
அவைத் தலைவர் காளிமுத்து உள்ளிட்ட நான்கு வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர்.காளிமுத்து உடல் நலக் குறைவு காரணமாகவும், மற்ற 3 பேரும் பல்வேறுகுற்றச்சாட்டுக்களின் பேரிலும் மாற்றப்பட்டனர்.
அதே போல புதுவை ஊசுடு தொகுதி வேட்பாளரும் மாற்றப்பட்டார்.
இந் நிலையில், மேலும் நான்கு வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றியுள்ளார்.
தாராபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிவகாமி வின்சென்ட்மாற்றப்பட்டு அவருக்குப் பதில் ரங்கநாயகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடையநல்லூரில் அயூப் மாற்றப்பட்டு கமலுதீன் புதிய வேட்பாளராகநிறுத்தப்பட்டுள்ளார். ஆலங்குளத்தில் வி.பி.ஈஸ்வரன் மாற்றப்பட்டு அவருக்குப்பதில் பாண்டியராஜ் புது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, புதுவை உருளையன்பேட்டை அதிமுக வேட்பாளரான நேரு என்றகுப்புசாமி மாற்றப்பட்டு நடிகர் ஆனந்தராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்து இப்போது நீக்கப்பட்டுள்ள சிவகாமிவின்சென்ட் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர் ஆவார்.
இவருடன் மேலும் 3 பாமக எம்.எல்.ஏக்களும் (அனைவருமே தலித்கள்) சேர்ந்தனர்.இவர்களில் யாருக்குமே தற்போது அதிமுக சார்பில் சீட் தரப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதனால் கோபமுற்றுள்ள முருகவேல்ராஜன், மீண்டும் ஒரு புதுக் கட்சியைத்தொடங்கி விட்டார்.
வேட்பாளர்களை அறிவித்து இரண்டு முறை மாற்றியுள்ள ஜெயலலிதா, வேட்பு மனு தாக்காலும் வரை மேலும்அதில் பல மாற்றங்களைச் செய்யக் கூடும். இதனால் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள யாருக்கும்,ஜெயலலிதா தவிர, தேர்தலில் நிற்பது என்பது நிச்சயம் அல்லாத நிலை உருவாகியுள்ளது.
அதிமுகவில் எதிலும் புரட்சி தான்...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications